வட்டுக்கோட்டை இளைஞன் பொலிஸாரின் பிடியில் இருந்தபோது சித்திரவதைக்குள்ளாகி மரணம் : மேலும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனின் சம்பவத்தினால் ஏற்கனவே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸார் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் கடமையில் இருந்தார்கள் என்ற ரீதியில் அவர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர் வெளியிட்ட காணொளியில் பொலிஸ் நிலையத்தில் தனக்கு இடம்பெற்ற சித்திரவதைகள் குறித்து கூறியிருந்தார். இந்த காணொளியை பார்வையிட்ட பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றமை…

Read More

மரணிக்காத தமிழர்களின் உணர்வு சுயநிர்ணய உரிமை சுதந்திரம் ஆகியவற்றிற்கான போராட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்தி நிற்கின்றது தமிழ்தேசிய கொடி தினம் – பிரம்டன் மேயர்

தமிழ்தேசிய கொடிதினம்  மரணிக்காத தமிழர்களின் உணர்வு சுயநிர்ணய உரிமை சுதந்திரம் ஆகியவற்றிற்கான  போராட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்தி நிற்கின்றது என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார் தமிழ்தேசிய கொடி தினத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ்தேசிய கொடி தினம்  சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றிற்கான தொடரும் போராட்டம் பாரம்பரியம் மீளுந்தன்மை போன்றவற்றிற்கான குறியீடாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். 33வருடாந்த தமிழ் தேசிய கொடி நாள் 2023 21…

Read More

உத்தேச மின்சாரத்துறை சீர்திருத்த சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி

உத்தேச மின்சாரத்துறை சீர்திருத்த சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், புதிய சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படும் என வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

Read More

மாதம்பையில் பஸ் மோதி மூவர் காயம்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் மாதம்பை பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று வீதியில் சென்று கொண்டிருந்த பெண்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை மோதியதில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மூன்று பெண்களும் ஹலாவத்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த சிறுமி பாடசாலை முடிவடைந்து தாயுடன் வீதியில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read More

நீதிமன்ற தீர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்களின்சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும்அரசாங்கத்தை வலியுறுத்தும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளமை தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிக முக்கியத்துவமுடையதாகும். குறித்த வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் உள்நாட்டில் மாத்திரமின்றி, வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அவற்றை மீட்டு அரசுடைமையாக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். காணொளியூடாக விசேட அறிவித்தலொன்றை விடுத்து இவ்வாறு வலியுறுத்தியுள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : நாட்டை வங்குரோத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் அண்மையில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தீர்க்கமானதாகும். நாட்டுக்காக…

Read More

உலகக் கிண்ணத்தை வெல்லப்போவது யார்? இறுதி போட்டி இன்று

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (19) நடைபெறவுள்ளது. இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் போட்டியை நடத்தும் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையே இந்த போட்டி இடம்பெறவுள்ளது. ஆரம்ப சுற்றுப் போட்டிகளின் 09 போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்றுள்ள இந்திய அணி, மிகவும் வலுவான மனநிலையுடன் இறுதிப் போட்டிகளுக்குள் பிரவேசித்துள்ளமை விசேட அம்சமாகும். அவர்கள் பங்கேற்ற 9 போட்டிகளில், ஒரு போட்டி கூட தோல்வியடையவில்லை. இந்தியா அனைத்து போட்டிகளிலும் மிக எளிதாக…

Read More

பிக்குவின் கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

பிக்கு ஒருவரின் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (19) காலை உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தெனியாய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். பல்லேகமவில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த வந்த 18 வயதுடைய பிக்குவால் கடந்த 16ஆம் திகதி பிற்பகல் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில், பொலிஸ் கான்ஸ்டபிள் கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டார். இந்த பொலிஸ் உத்தியோகத்தர்…

Read More

நாட்டில் ஒரே நாளில் நடைமுறைக்கு வந்த 4 சட்டங்கள்

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு சட்டமூலங்களில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்த) சட்டமூலம், ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டமூலம் என்பவற்றை சபாநாயகர் சான்றுரைப்படுத்தியுள்ளார். அதற்கமைய, 2023 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்த) சட்டம், 2023 ஆம் ஆண்டின் 28 ஆம்…

Read More

அல் ஷிஃபா மருத்துவமனைக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

காசா பகுதியில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனையின் அனைத்து நோயாளிகள் மற்றும் ஊழியர்களை 1 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக அல் ஷிஃபா மருத்துவமனையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அல் ஷிஃபா மருத்துவமனையின் வைத்தியர்கள் 1 மணி நேரத்திற்குள் அனைவரையும் வெளியேற்றுவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனிடையே, தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரின் மீது இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 26 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன….

Read More

பணம் சம்பாதிப்பதற்காகவே இலங்கை கிரிக்கெட்  விற்கப்பட்டது

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவருக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அரசாங்கத்திடம் இருந்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எதிர்கொள்ளும் சவால்களை குறிப்பிட்டு 5 அம்சங்களின் கீழ் இந்த கடிதத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கிரிக்கெட் போட்டிகளுக்காக விளையாட்டுப் பணிப்பாளர் நாயகமத்தின் தலையீடு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளின் சம்பள விபரத்தை விளையாட்டுத்துறை அமைச்சின்…

Read More