குடைசாய்ந்த முச்சக்கர வண்டி: ஒருவர் பலி
தெனியாய – சீத்தாஎலிய பகுதியில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று(14) மாலை இந்த விபத்து இடம்பெற்றது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி, சுமார் 13 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி மற்றும் மேலும் 2 பயணிகள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 47 வயதான பெண்ணொருவர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். ஏனைய இருவரும் தெனியாய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சடலம் குறித்த…

