இன்று முதல் அதிகரிக்கின்றது மின்சாரக் கட்டணம் !

இன்று முதல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபைக்கு அனுமதிக வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மின்சார கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்சாரம் பயன்படுத்தப்படும் அலகுகளுக்கு ஏற்ப, மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் விதம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சீன ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன ஜனாதிபதி சீ ஜின் பிங்கை சந்தித்துள்ளார். சீனாவில் பீஜிங் நகரித்திலேயே குறித்த சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (20) இடம் பெற்றுள்ளது. ஜனாதிபதி  16ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் சீனாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.  சீன துணைப் பிரதமர் டிங் க்ஸூசியாங் மற்றும் சீன நிதி அமைச்சர் லியு குன்…

Read More

சினோபெக் நிறுவனத்தால் பெற்றொலியக் கூட்டுத்தாபனத்துக்கு 40 மில்லியன் டொலர் சேமிப்பு – டி.வி.சாகன

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்களால் இலங்கையில் எரிபொருள் இறக்குமதி செயற்பாடுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விலை சூத்திரத்துக்கமைய விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், 2024 ஜூன் வரை எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சாகன தெரிவித்தார். எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 200 மில்லியன் டொலர் கையிருப்பினை பேணி வருவதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.வி.சாகன, சைனோபெக் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதால் மேலும் 40 மில்லியன் டொலரை…

Read More

பொலிஸ் மா அதிபருக்கான சேவை நீடிப்பிற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி மறுப்பு

ஜனாதிபதியினால் பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவிற்கு வழங்கப்பட்ட மூன்று வார சேவை நீடிப்பிற்கு அனுமதி வழங்க அரசியலமைப்பு பேரவை மறுப்பு தெரிவித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபோவர்தன தலைமையில் குறித்த குழு நேற்று(17) கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Read More

நேபாள கடவுச்சீட்டை பயன்படுத்தி சீன உளவாளிகள் இந்தியாவிற்குள் நுழைவதாக RAW எச்சரிக்கை

நேபாளம் ஊடாக சீன உளவாளிகள் இந்தியாவிற்குள் நுழைவதாக இந்தியாவின் முன்னணி உளவு அமைப்பான RAW எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளியிடும் இந்திய இணையத்தளம் இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.  சமீபத்திய விசாரணைகளில் வெளிக்கொணரப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு RAW அமைப்பு குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. நேபாள கடவுச்சீட்டை பயன்படுத்தி சீன உளவாளிகள் இந்தியாவின் புனே, மும்பை, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களுக்குள் ஊடுருவியுள்ளதாகவும் குறித்த சீன உளவாளிகள் சாமானியர்களைப் போன்று…

Read More

காசா மோதல்கள் தொடர்பில் கூட்டு அறிக்கையை வௌியிட ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதமர் இடையே இணக்கப்பாடு

காசா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல்கள் தொடர்பில் கூட்டு அறிக்கையொன்றை வௌியிடுவதற்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோர் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் நேற்று(17) இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளது.  ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள ஜனாதிபதி, பாகிஸ்தான் பிரதமர் Anwaar ul Haq Kakar சந்தித்துள்ளார்.  காசா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல்கள் தொடர்பில், இருதரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதுடன், கூட்டு அறிக்கையொன்றை…

Read More

IMF இரண்டாவது தவணை தொகை அடுத்த வாரம்!

சர்வதேச நாணய நிதியத்திற்கு கிடைக்க வேண்டிய இரண்டாவது தவணை தொகை அடுத்த வாரம் கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமான நிலையை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”மிகவும் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. மிகக் கடுமையான பொருளாதாரப் படுகுழியில் விழுந்துவிட்டோம். சில விஷயங்களில் உடன்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. அவை அனைத்தும் வெற்றியடையும். இரண்டாம் தவணை வழங்கும் தொகையை மிக விரைவில் பெறலாம் என…

Read More

2 வயது சிறுமி கிணற்றில் கிணற்றில் விழுந்து பலி

கொக்காவெவ, துடுவெவ பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று (17) மாலை கிணற்றில் விழுந்த தாய் மற்றும் சிறுமி ஒருவர், கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொக்கவெவ பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே உயிரிழந்திருந்த நிலையில் காணப்பட்டார் எனவும், சிறுமியின் தாய் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. துடுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயது 5 மாதங்களான சிறுமியே சிறுமியோ உயிரிழந்துள்ளார். துடுவெவ பிரதேசத்தில் உள்ள விவசாய கிணற்றில்…

Read More

மருத்துவமனையின் மீது தாக்குதல் – 500 பேர் பலி!

காசாவில் உள்ள அஹ்லி அரபு மருத்துவமனையைத் தாக்கிய இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு 500 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடைவிடாத தாக்குதல்களில் இருந்து மருத்துவ சிகிச்சையை பெற்று வருகின்றனர். தாக்குதலில் நடத்தப்பட்ட மருத்துவமனை குழந்தைகள் நிறைந்த மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

லெபனானில் கட்டிடமொன்று இடிந்து விழுந்து விபத்து

லெபானின் பொதுமக்கள் வசிக்கும் கட்டிடமொன்று இடிந்துவிழுந்ததில் இலங்கையர் உட்பட பலர் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை உறுதிசெய்துள்ளது. ஐந்து மாடிக்கட்டிடத்தின் இரண்டு மாடிகள் முற்றாகஇடிந்துவிழுந்தன மீட்பு பணிகள் இடம்பெறுகின்றன.

Read More