இலங்கை தொடர்பில் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ள முக்கிய விடயம்
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைவடைந்திருப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் எனும் கட்டமைப்புக்குள் அரச சட்டவாதி செயற்படும் முறை மிகமுக்கியமான காரணமாகும். சட்டத்துறை சார்ந்த விவகாரங்களில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கல் மற்றும் குற்றமொன்றை சட்டத்துக்கு அமைவாகக் கையாளல் ஆகிய இரண்டு பணிகளை சட்டமா அதிபர் முன்னெடுப்பதானது வெளிப்படையாகத் தெரியக்கூடிய முரண்பாடொன்றைத் தோற்றுவித்திருக்கின்றது என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: சர்வதேச நாணய நிதியத்தினால் கடந்த…

