இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உரிமை கோரியதால் மக்கள் மத்தியில் குழப்பம்
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார் காணி பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணி என அதிகாரிகள் உரிமை கோரி வந்தமையால் , காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது. அது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 33 வருட காலத்திற்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த மாங்கொல்லை பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியதை அடுத்து , அப்பகுதி மக்கள் தமது காணிகளை அடையாளப்படுத்தி , எல்லைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு…

