மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலை காரணமாக அங்கு வாழும் இலங்கையர்களின் அவசர உதவிகளுக்காக தொலைப்பேசி வசதியொன்றை  வௌிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, 0094711 757 536   அல்லது  0094711 466 585 என்ற இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவின் +94 112 338 837 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அலுவலக நேரத்தில் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய…

Read More

போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்!

மத்திய கிழக்கில் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் காஸாவிற்கு உதவிகளை அணுகக் கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் பதிவாகியிருந்த நிலையில், 45 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தீர்மானத்திற்கு எதிராக இஸ்ரேல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்திருந்த நிலையில், ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸின் தீவிரவாத…

Read More

வௌியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் (requirement) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த தேவைகள்  (requirement) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு முதலீட்டாளர் ஒரு சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகத்தை நடத்த குறைந்தபட்சம் 05 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய வேண்டும். குறித்த முதலீட்டாளருக்கு சுங்க வரியில்லா வர்த்தக நடவடிக்கைகளில் உலகளாவிய…

Read More

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணைகள் – ஐநாவின் தலையீட்டை கோரினார் மல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வெளிப்படையான  விசாரணைக்கான இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் முயற்சிகளிற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஆதரவளிக்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் ஜெனீவாவில் மனித உரிமைகளிற்கான ஐக்கிய நாடுகளின் பிரதி ஆணையாளர் நடா அல் நசீவை சந்தித்தவேளை அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ஐநாவின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் கர்தினாலுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சமில்பெரேராவும் கலந்துகொண்டுள்ளார். நீதிக்கான எங்களின் தொடர்ச்சியான வேண்டுகோள்கள் குறித்து ரணில்ராஜபக்ச அரசாங்கம் அலட்சியமாகயிருப்பதால் ஐநா…

Read More

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தொடர்பிலான விசாரணைகள் தீவிரம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரி இருக்கிறது. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையின் ஒரு அங்கமாகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.  தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்க பல்கலைக்கழகத்தில் பொறுப்பு வாய்ந்த  அதிகாரி ஒருவரை நாளை மறுதினம் திங்கட்கிழமை நேரில்  சமூகமளிக்குமாறு…

Read More

அம்பிட்டிய சுமணரத்தன தேரர் இனமோதல்களை தூண்டுகின்றார் – தமிழ் உணர்வாளர் அமைப்பு பொலிஸில் முறைப்பாடு

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தமிழர்கள் மீதான இன வன்முறைகளை தூண்டும் விதமாக வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் முறைப்பாடு செய்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை (27) மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்குச் சென்ற தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அம்பிட்டிய சமணரத்ன தேரர் இனங்கள், மற்றும் மதங்களை மையப்படுத்தி தெரிவிக்கும் கருத்துக்கள் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வன்முறைகள் தோற்றம் பெறுவதற்கான…

Read More

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் மீண்டும் ஆரம்பம்

உயர் பாதுகாப்பு வலயத்தின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, தையிட்டி பகுதியில் மக்களது காணிகளை சுவீகரித்து சட்டவிரோத திஸ்ஸ விகாரையானது அமைக்கப்பட்டது. இந்த விகாரைக்கு காணியின் உரிமையாளர்கள் உட்பட பொதுமக்கள் மற்றும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தின.  இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் குறித்த விகாரையில் போயா தினமான இன்று வழிபாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் நேற்று போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டத்தில் தமிழ்…

Read More

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் கண்காணிப்பு கெமராக்கள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் பாதுகாப்பு கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் நீர் உட்புகாதவாறு மழை நீர் தடுப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கொட்டகையும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவாவின் பணிப்புரைக்கு அமைய, இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி பகுதியில் கொக்குளாய் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Read More

தேசிய அடையாள அட்டைக்கான விநியோகக் கட்டணம் அதிகரிப்பு

தேசிய அடையாள அட்டைக்கான விநியோகக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்பதிவு சட்டத்தை திருத்தி வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியூடாக கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மாதம் 23 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்திற்கு அமைவாக தேசிய அடையாள அட்டையின் பிரதியை பெற்றுக்கொள்வதற்கான புதிய கட்டணம் 1000 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டையில் உள்ளடங்கியுள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்கான கட்டணமும் அதிரிக்கப்பட்டுள்ளது. Online ஊடாக முன்வைக்கப்படும் விண்ணப்பங்களுக்கான…

Read More

போராட்டத்திற்கு தயாராகியுள்ள ஆசிரியர்கள்

ஆசிரியர் சங்கங்கள் இன்று (27) நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன. கடந்த 24ஆம் திகதி பத்தரமுல்லை பெலவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் நடத்திய கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்ததில் பலர் காயமடைந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மதியம் 1.30 மணிக்கு பாடசாலை நிறைவடைந்ததும் பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேவேளை, அரச மற்றும் அரச…

Read More