நீதிபதி சரவணராஜாவின் விடயத்தில் முழுமையான கரிசனை கொள்ளப்படும் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் பிரதம நீதியரசர் தெரிவிப்பு
நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக உண்மைகளை கண்டறிவது தொடர்பில் முழுமையான கரிசனை கொள்ளப்படும் என்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌவல்ய நவரத்ன தலைமையிலான நிறைவேற்றுக் குழுவினர் மற்றும் யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.தவபாலன் ஆகியோருக்கும், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று காலை நடைபெற்றிருந்தது. இந்தச் சந்திப்பின்போது, முல்லைத்தீவு மாவட்ட நீதிவான்…

