பாதாள உலகச் செயற்பாடுகளை ஒழிக்க புதிய திட்டம்

எதிர்வரும் 06 மாதங்களில் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்தி பாதாள உலகச் செயற்பாடுகளை முற்றாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், கைதி ஒருவர் தெரிவித்தது போன்று மீண்டும் கொழும்பில் தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என விசாரணையில் ஏற்கனவே தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர்…

Read More

இன்று ஆய்வை ஆரம்பிக்கும் சீன கப்பல்

நாட்டை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான “ஷி யான் 6”, நாரா நிறுவனத்துடன் இணைந்து இன்று (30) நாட்டின் மேற்குக் கடலில் தனது ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது. “ஷி யான் 6 என்ற சீன ஆய்வுக் கப்பல் கடந்த 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இது தொடர்பான ஆய்வுகளை இன்றும் நாளையும் (31) மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. இந்த ஆராய்ச்சிக்கு அமைய  கப்பலின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்குக் கடலின் நீர் மாதிரிகள்…

Read More

ஆப்கானுடன் இன்று மோதும் இலங்கை

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி இன்று (30) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி புனேயில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகிறது. பயிற்சியின் போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார உபாதைக்கு உள்ளானதை அடுத்து அவருக்கு பதிலாக துஷ்மந்த சமிர இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளார். மேலும் இதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தொழில்நுட்ப குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இன்றைய போட்டியில் துஷ்மந்த சமிர…

Read More

ஆந்திர ரயில் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று (29) இரவு ஒரு பயணித்த பயணிகள் ரயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்திருந்த போது விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு பயணித்த மற்றொரு பயணிகள் ரயில் அதன் பின்புறத்தில் பலமாக மோதியது. இதில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 13…

Read More

ஒரு கோடி பெறுமதியான களைக்கொல்லிகள் மீட்பு

கற்பிட்டி கடற்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திர படகு ஒன்றிலிருந்து தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் என்பன நேற்று (29) கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கற்பிட்டி விஜய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடற்படை மற்றும் விசேட படகுப்பிரிவைச் சேர்ந்த கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 43 மற்றும் 46 வயதுடைய இரண்டு…

Read More

நாடளாவிய ரீதியில் இன்று போராட்டம்

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று (30) போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் இந்த போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி, அலுவலக சேவைகள், மாகாண அரசாங்க சேவைகள் உட்பட பலர் இதில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இன்று பகல் 12.00 மணிக்கு மதிய உணவு…

Read More

காசாவிலிருந்து வெளியேற முடியாமல் சிக்குண்டுள்ள 17 இலங்கையர்கள்

இஸ்ரேல் காசா மீதான தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் முழுமையான போர் குறித்த அச்சங்களிற்கு மத்தியில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 இலங்கையர்கள் தொடர்ந்து காசா பள்ளத்தாக்கில் சிக்குண்டுள்ளனர். இலங்கையர்கள் தற்போது தென்காசாவில் தஞ்சமடைந்துள்ளனர்,ஆனால் எகிப்திற்கு செல்லும் ரபா எல்லை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதால் அவர்களை வெளியேற்ற முடியாத நிலையில் இலங்கை அதிகாரிகள் உள்ளனர். எகிப்திற்கு செல்வதற்கு இதுவே ஒரே வழி மேலும் இஸ்ரேலிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத ஒரேவழியாக இது காணப்படுகின்றது. மூன்று குடும்பங்களை சேர்ந்த…

Read More

ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்தின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கு எதிராக வழக்கு தாக்கல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம் செய்தபோது அங்கே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களில் 40 பேருக்கு எதிராக நீதிமன்றங்களில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.  கடந்த 7, 8ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டபோது  செங்கலடி மற்றும் நகரில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பௌத்த தேரர்கள், கால்நடை பண்ணையாளர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு எதிராக நீதிமன்ற கட்டளையை மீறி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில்…

Read More

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் கப்பலான அகேபோனோ  உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இது திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்தக் கப்பல், 150.5 மீற்றர் நீளமுடையதாகும். இக்கப்பலில் கட்டளை அதிகாரி கப்டன் ஹிசாடோ சோடோகாவா மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோர் கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடத்தினர். இக்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது , இரு நாட்டு கடற்படைகளுக்கு…

Read More

மஸ்கெலியாவில் மூன்று மாணவர்களை காணவில்லை

மஸ்கெலியா – நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்டத்தின் எமில்டன் பிரிவில் மூன்று மாணவர்கள் காணாமற்போயுள்ளனர். பாடசாலைக்கு செல்வதாகக் கூறி, வீட்டிலிருந்து நேற்று புறப்பட்ட மாணவர்கள் இன்று வரை வீடு திரும்பவில்லையென நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர். 13, 14, 15 வயதுடைய மாணவர்களே காணாமற்போயுள்ளனர். வீட்டின் அருகிலுள்ள நீர்க்குழாயொன்றை உடைத்ததாகவும், பெரியோரின் தண்டனைக்கு பயந்து அவர்கள் தலைமறைவாகியிருக்கலாமெனவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார். பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து காணாமற்போன மாணவர்களைத் தேடி…

Read More