தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் பதவியிலிருந்து சுரேஸ் சாலேயை பதவி நீக்கவேண்டும் – விஜித ஹேரத்
தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் சுரேஸ் சாலேயை உடனடியாக பதவி நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தேசிய மக்கள் சக்தி பிள்ளையானிற்கு எதிராக பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே தேசிய மக்கள் சக்தி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. செய்தியாளர் மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநராக சுரேஸ் சாலே தொடர்ந்தும் பணியாற்றும்…

