933 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

933 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.  அவர்களில் 926 ஆண்களும் 7 பெண்களும் அடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  25 ஆவது தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு இந்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Read More

மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000-ஐ நெருங்கியது

மொராக்கோவில் அட்லஸ் மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ள மராகேஷ்-சாபி (Marrakesh-Safi) பிராந்தியத்தில் 6.8 மெக்னிட்யூட் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2800-ஐ கடந்துள்ளது.   2500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  ஆயிரக்கணக்கானவர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.  மலைப் பகுதியில் உள்ள கிராமங்கள் அனைத்தும் அழிவடைந்துள்ளன.  இந்நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 4 நாட்களைக் கடந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், தொடர்ந்தும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. 

Read More

லிபியாவை தாக்கிய ​டேனியல் புயலால் 2000 பேர் பலி; ஆயிரக்கணக்கானோரை காணவில்லை

லிபியாவை தாக்கிய ​டேனியல் புயல் காரணமாக 2000 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமற்போயுள்ளனர்.   வடகிழக்கு லிபியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தெற்கு ஆப்பிரிக்காவின் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில், லிபியாவை தாக்கிய டேனியல் புயலால் அந்நாட்டின் Derna,  Misrata, Shahhat உள்ளிட்ட பல பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.  இதனால், பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.  புயல், கனமழை வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்…

Read More

IMF பிரதிநிதிகள் குழு இன்று நாட்டிற்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் குழு இன்று(13) நாட்டிற்கு வருகை தரவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படும் கடன் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட மீளாய்வு நாளை(14) முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Read More

புதிய அரசியல் கட்சிக்கு கோட்டாபய ராஜபக்ஸ ஆதரவு?

தொழிலதிபரான திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம மக்கள் கட்சிக்கு கோட்டாபய ராஜபக்ஸ தமது ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த கோட்டாபய ராஜபக்ஸ, தனக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபர்  தலைமையிலான புதிய அரசியல் கட்சியின் மூலம் இழந்த தனது நன்மதிப்பை மீண்டும் கட்டியெழுப்பவும் பலப்படுத்தவும் தயாராகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தாலும், முன்னாள் ஜனாதிபதிக்கான சகல சலுகைகளையும் வசதிகளையும் பெற்றுக்கொள்ளும் கோட்டாபய ராஜபக்ஸ, அண்மையில் தொழிலதிபர்…

Read More

மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி

இலங்கையில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தற்போதுள்ள மருத்துவ பீடங்களின் தரத்திற்கு அமைவாக இந்த புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, “மூன்று புதிய மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கு…

Read More

ஜெனிவாவில் ஈஸ்டர் தாக்குதல் குறித்து அவதானம்

2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்து, அதன் பிரதி உயர்ஸ்தானிகர் நாதா அல் நஷீப் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 54 ஆவது கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு…

Read More

இந்திய – பாகிஸ்தான் போட்டிக்கு மீண்டும் பாதிப்பு

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி தற்போது கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் 357 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 44 ஓட்டங்களையை பெற்றிருந்த நிலையில், ​​போட்டி மீண்டும் மழையால் தடைபட்டுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 356…

Read More

IMF உடனான பேச்சுவார்த்தைக்கான அனைத்து செயற்பாடுகளும் தயார் – நிதி இராஜாங்க அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்துடன்(IMF) முன்னெடுக்கப்படும் கடன் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயாரென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Read More

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழு நாட்டிற்கு வருகை

கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது.  கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அழைப்பிற்கிணங்க அந்த குழுவினர் நாட்டிற்கு வந்துள்ளனர்.  இலங்கையின் கரையோரப் பகுதிகளை பாதுகாப்பது தொடர்பில் 3 செயன்முறைகளின் ஊடாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இந்நாட்டு அதிகாரிகளை தௌிவுபடுத்தவுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  கப்பல் விபத்து மற்றும் கடலோர குழாய் அமைப்புகளில் காணப்படும் கோளாறுகள் ஆகியவற்றை முன்கூட்டியே தடுத்தல், கப்பல் விபத்துகள் ஏற்பட்டால் அதன்…

Read More