நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எந்த அரசாங்கமும் முயற்சியை மேற்கொள்ளவில்லை – நீதி அமைச்சர் விஜயதாச
நாட்டில் அதிகாரத்தில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான உண்மையான முயற்சியை மேற்கொண்டிருக்கவில்லை. அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் உட்பட நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களை தடுப்பதற்கு முடியுமாகி இருந்தபோதும் அதற்கான முறையான வேலைத்திட்டம் இருக்கவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். செப்டம்பர் 21ஆம் திகதி சர்வதேச சமாதான தினத்தையொட்டி அவர் விடுத்திருந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சமாதானம் அனைத்து மக்கள் பிரிவுக்கும் நாட்டுக்கும் மற்றும் முழு உலகுக்கும்…

