கடலுக்கடியில் மறைந்துள்ள 8 ஆவது கண்டம்: புதிய வரைபடத்தை வௌியிட்ட ஆய்வாளர்கள்

பசுபிக் பெருங்கடலில் பல மர்மங்கள் மறைந்துள்ளன. எனினும், ஒரு கண்டமே மறைந்திருப்பதாக புவியியலாளர்கள் கூறி வந்த நிலையில், அவர்கள் அதன் வரைபடத்தை தற்போது உருவாக்கியுள்ளனர். 2017 ஆம் ஆண்டில், நியூசிலாந்தின் கரையோரத்தில் முன்னர் எப்போதும் அறியப்படாத ஒரு கண்டம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சீலந்தியா அல்லது மாவோரி மொழியில் Te Riu-a-Māui என்று அதற்கு பெயரிடப்பட்டது. Zealandia அல்லது Te Riu-a-Maui என பெயரிடப்பட்டுள்ள குறித்த கண்டத்தை பற்றி இன்னும் பல விடயங்களைத் தேடி ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன. பூமியில்…

Read More

பாகிஸ்தானில் தற்கொலைக் குண்டு தாக்குதல்களில் 57 பேர் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று (29) நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் 52 பேர் பலியாகியுள்ளனர். மசூதி அருகே நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பலூசிஸ்தானில் மஸ்துங் (Mastung) மாவட்டத்தில் உள்ள மதினா மசூதி அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதன்போது, மஸ்துங் மாவட்ட பொலிஸ் துணை கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் உயிரிழந்துள்ளார். மிலாதுன் நபியை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழுகைக்காக ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால், உயிரிழப்புகளும் பாதிப்புகளும் அதிகமாகியுள்ளன. இந்த தாக்குதல்…

Read More

அஸ்தானா மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கசகஸ்தான் ஜனாதிபதி Kassym-Jomart Tokayev-க்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஆரம்பமாகியுள்ள உலகளாவிய பெர்லின் கலந்துரையாடலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்குபற்றிய போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, 2024 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள அஸ்தானா சர்வதேச மாநாட்டில் (Astana International Forum) கலந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கசகஸ்தான் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

Read More

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வு

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கை தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது. இந்த விடயம் குறித்து பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுளா பெர்னாண்டோவிடம் வினவியபோதே அவர் இதனை குறிப்பிட்டார். மின்சார உற்பத்திக்காக செலவிடப்படும் தொகையை ஈடு செய்யும் வகையில், மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இவ்வருடம் எதிர்பார்த்த…

Read More

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன் பெற தீர்மானம்

பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து கொள்கை அடிப்படையிலான விசேட கடன் வசதிகளைப் பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 02 துணை வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வீதம் கொள்கை அடிப்படையிலான 02 கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளது.  அதன் முதலாவது துணை வேலைத்திட்டத்தின் கீழ் நெருக்கடி முகாமைத்துவ பணிவரைபு மற்றும்…

Read More

2023 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

2023 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அணியின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணைத் தலைவராக குசல் மெந்திஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 2023 உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் பின்வருமாறு… தசுன் சானக்க  – தலைவர்குசல் மெந்திஸ் – துணைத் தலைவர் குசல் ஜனித் பெரேராதிமுத் கருணாரத்னபெத்தும் நிஸ்ஸங்கசரித் அசலங்கதனஞ்சய டி சில்வாசதீர சமரவிக்ரமதுனித் வெல்லாலகேகசுன் ராஜிதமதிஷ பத்திரனலஹிரு குமாரதில்ஷான் மதுஷங்க இதேவேளை, உடல் தகுதி அடிப்படையில் பெயரிடப்பட்ட வீரர்கள், வனிந்து…

Read More

புத்தல பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்!

புத்தல பிரதேசத்திற்கு அருகில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (25) இரவு 11.20 மணியளவில் 2.4 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் சுமார் ஒரு கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந் நாட்டில் இயங்கி வரும் நான்கு நில அதிர்வு அளவீடுகளும் பதிவாகியுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கம் காரணமாக சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

Read More

சாதாரண தர பரீட்சை பிற்போடப்படும்: கல்வி அமைச்சர் தெரிவிப்பு

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான பாடநூல் விநியோகத்தை ஆரம்பித்து வைத்த நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்தார். ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதம் சாதாரண தர பரீட்சையை பிற்போட வேண்டி ஏற்படும் எனவும் அதனை உத்தியோகபூர்வமாக ஆணையாளர் அறிவிப்பார் எனவும்  கல்வி அமைச்சர் கூறினார்.  COVID பெருந்தொற்றுக்கு பின்னர் உருவான நெருக்கடியினால் இரண்டு வருடத்திற்கு அதிகக்…

Read More

சட்டமூலங்களை மீள பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்

வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்பவற்றை உடனடியாக நீக்கிக் கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. இந்த 2 சட்டமூலங்களும் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டவாக்கத்தை அதிகளவில் பாதிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று(23) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. தம்மிடமோ அல்லது துறைசார்ந்த எந்த தரப்பிடமோ கருத்துகளை வினவாமல் இந்த சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்…

Read More

ஜேர்மன் செல்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜேர்மனிக்கு செல்லவுள்ளார். நாளை (26) இரவு ஜனாதிபதி ஜேர்மனிக்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேர்லின் உலகலாவிய விவாதத்தில் பங்கேற்பதற்காக இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் மாநாட்டில் உரையாற்றவும் உள்ளார். தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு உலகளாவிய தீர்வுகளைக் கண்டறிவதற்கான பெர்லின் உலகலாவிய விவாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா…

Read More