கண்ணிவெடி அகற்றலுக்காக ஜப்பானிடமிருந்து 170 மில்லியன் நிதியுதவி
வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 170 மில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளது. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் நிலையான அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்காகவும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி ( MIZUKOSHI Hideaki) தெரிவித்துள்ளார் இந்த வருடத்திற்கான ஜப்பானின் அபிவிருத்தி உதவி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள காணிகளை சுத்திகரிக்க எதிர்பார்க்கப்படுவதோடு, இடம்பெயர்ந்த 400-க்கும் மேற்பட்டவர்ளை மீள குடியமர்த்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணிவெடியகற்றும்…

