காலி சிறைச்சாலையில் இருந்து கைதிகளை வெளியே அழைத்துச்செல்ல தற்காலிகத் தடை

காலி சிறைச்சாலையில் இருந்து கைதிகளை வெளியே அழைத்துச்செல்ல இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  சிறைக்கைதிகளிடையே பரவும் காய்ச்சல், தோல் தொற்றுநோய் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தற்போதைய நிலைமையில், சிறைக்கைதிகளை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் செயற்பாடுகள் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் சிறைச்சாலை ஊடகப்பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். காலி சிறைச்சாலையில் இரண்டு சிறைக்கைதிகள் உயிரிழந்தமை, சிறைச்சாலையில் இந்நாட்களில் பரவிவரும் நோய் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட வைத்தியர்கள் குழாமொன்று சிறைச்சாலைக்கு  இன்று சென்றிருந்தது. தோலில் தொற்று…

Read More

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்?

இந்திய கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நான்கு இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆர்காட்டுத்துறையில் இருந்து தென்கிழக்கில் 22 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை இலங்கை கடல் கொள்ளையர்கள்  தாக்கியதாக சன் செய்தி வௌியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் 5 இலட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை கொள்ளையர்கள் தங்களைத் தாக்கி, வலைகளை எடுத்துச்சென்றதாக மீனவர்கள்…

Read More

சீனாவிடமிருந்து இராணுவத்துக்கு அதிநவீன தகவல் தொடர்பாடல் வசதிகள் கொண்ட வாகனங்கள்

சீனாவுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் கடந்த 2017ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்கமைய , சீனாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அதிநவீன தகவல் தொடர்பாடல் அமைப்புகளுடன் கூடிய வாகனங்கள் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோரால் உத்தியோகபூர்வமாக இன்று (22) இராணுவ தலைமையக வளாகத்தில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டது. 45 மில்லியன் யுவான் (அமெரிக்க டொலர் 6.2 மில்லியன்) பெறுமதியான இந்த தொடர்பாடல் முறைமை இராணுவத் தளபதி லெப்டினன்…

Read More

சிங்கப்பூர் பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு

ங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (Lee Hsien Loong) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (22) பிற்பகல் இஸ்தானா மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது சிங்கப்பூர் பிரதமரால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அன்பான வரவேற்பளிக்கப்பட்டது. இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ பேச்சுக்களை தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படும் ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் தலைவர்கள் அவதானம் செலுத்தியிருந்ததோடு, பரந்த பொருளாதார…

Read More

அடாவடியில் ஈடுபட்ட தோட்ட முகாமையாளர் பணி நீக்கம்

அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலையீட்டால் மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்துக்குட்பட்ட ரத்வத்தை தோட்ட பகுதியில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளர் பணி நீக்கம் செய்வதற்கு தோட்ட நிர்வாகம் இணங்கியுள்ளது. அத்துடன், குறித்த உதவி முகாமையாளரால் அடித்து நொறுக்கப்பட்ட வீட்டுக்கு பதிலாக பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு புதிய வீடொன்றை நிர்மாணித்து கொடுக்கவும் நிர்வாகம் இணங்கியுள்ளது. மாத்தளை, ரத்வத்தை தோட்டப்பகுதியில் தோட்ட தொழிலாளர் ஒருவரின் தற்காலிக குடியிருப்பை உதவி முகாமையாளர் ஒருவர் அடித்து நொறுக்கும் காட்சி மலையக மக்கள்…

Read More

நிலவில் மோதிய ரஷ்யாவின் லூனா – 25 விண்கலம்

நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக ரஷியா, லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10-ஆம் திகதி விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு போட்டியாக ரஷிய விண்கலம் அனுப்பப்பட்டது. சந்திரயான்-3 விண்கலம் 23-ஆம் திகதி நிலவில் தரை இறங்க திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு முன்பாக 21-ஆம் திகதி லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க ரஷிய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு ரஷியா அனுப்பிய லூனா-25 விண்கலம் கடந்த 17ஆம் திகதி வெற்றிகரமாக நிலவின்…

Read More

பெண்களுக்கான கால்பந்து உலக கிண்ணத்தை வென்றது ஸ்பெயின்

32 அணிகள் பங்கேற்ற 9 ஆவது பெண்கள் உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 20 ஆம் திகதி நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் தொடங்கியது. பிரிஸ்பேனில் நேற்று (19) நடந்த 3 ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் ஸ்வீடன் அணி 2 – 0 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி 4 ஆவது முறையாக வெண்கலப்பதக்கத்தை பெற்றது. இந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று (20) நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல்முறையாக நுழைந்துள்ள இங்கிலாந்து,…

Read More

சூரிய மின் உற்பத்தி தொடர்பில் முன்னணி இந்திய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

சூரிய மின் உற்பத்தியில் ஈடுபடும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சுரானா குழுமத்துடன் , இலங்கையில் சூரிய மின் உற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கலந்துரையாடியுள்ளார். குறித்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய உற்பத்தி வசதிகளை ஏற்படுத்துவதற்கு பொறுத்தமான இடங்களை…

Read More

வெளிநாடுகளுக்கான முதலீட்டு ஊக்குவிப்பு பிரதிநிதிகள் நியமனம்

வெளிநாடுகளுக்கான முதலீட்டு ஊக்குவிப்பு பிரதிநிதிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அந்த பிரதிநிதிகள் ஊடாக இலங்கைக்கு முதலீடுகளை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும்.  வௌிநாடுகளில் பணிபுரியும் அல்லது சுயதொழில் புரியும் இலங்கையர்களை முதலீட்டு ஊக்குவிப்பு பிரதிநிதிகளாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கனடாவிலுள்ள முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை மேற்கொள்வதற்கான பிரதிநிதியாக கனடா – இலங்கை வர்த்தக அமைப்பின் தலைவர் குலா செல்லத்துறை நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

பாம்பு தீண்டியதில் 56 வயது பெண் பலி

பசறை – கோணக்கலை கீழ்பிரிவு தோட்டத்தில் பணிபுரிந்த பெண்ணொருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். பசறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோணக்கலை கீழ்பிரிவு தோட்டத்தில் பணிபுரியும் தோட்ட தொழிலாளியொருவரை கடந்த 16ஆம் திகதி பாம்பு தீண்டியிருந்தது. குறித்த பெண் சிகிச்சைகளுக்காக பசறை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி 56 வயதான கந்தன் முத்துலட்சுமி நேற்று முன்தினம்(18) வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம்…

Read More