இலங்கை வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 இலங்கைக்கு வருகை தர திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் இடம்பெறவுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பில் பல தேசிய பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி…

Read More

நிலவின் தென் துருவத்திற்கு மனிதகுலத்தின் முதலடியை எடுத்துச்சென்று தனது பெயரின் அர்த்தத்தினை நிரூபித்தது விக்ரம்!

நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. சந்திராயன் நிலவினை அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் வெற்றியை தெரிவித்த இஸ்ரோ தலைவர் ‘இந்தியா நிலவில் உள்ளது’ என்று அறிவித்திருக்கின்றார். நிலவினை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14ம் திகதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து…

Read More

புதிய தூதுவர்களால் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்கான  புதிய தூதுவர்களாக நியமனம் பெற்றுள்ள இருவரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். இத்தாலி  மற்றும் ஜேர்மன்  ஆகியவற்றின் இலங்கைக்கான புதிய தூதுவர்களும், பிரித்தானிய மற்றும் வட அயர்லாந்துக்கான புதிய உயர்ஸ்தானிகருமே இவ்வாறு நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். பிரித்தானிய மற்றும் வட அயர்லாந்துக்கான உயர்ஸ்தானிகராக ஆண்ட்ரூ பெட்ரிக் , ஜேர்மனுக்கான தூதுவராக கலாநிதி பெலிக்ஸ் நியூமன் , இத்தாலிக்கான தூதுவராக டாமியானோ பிரான்கோவிக் ஆகியோர்…

Read More

கேபிள் கார் விபத்து – குழந்தைகள் உட்பட 8 பேரும் பாதுகாப்பாக மீட்பு

பாகிஸ்தானில் கேபிள் கார் விபத்தில் சிக்கியிருந்த குழந்தைகள் உட்பட 8 பேரும் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்துன்வா பிராந்தியம். இது கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும். இங்குள்ள பள்ளத்தாக்குகளைக் கடக்க பாலங்கள் அமைக்க முடியாததால், மக்கள் ஒரு மலையிலிருந்து எதிரே உள்ள மலைக்கு அந்தரத்தில் கேபிள் கார் எனப்படும் ஒரு கயிறின் மூலமாக இயக்கப்படும் சிறு வாகனத்தில் அமர்ந்து பயணம்…

Read More

பாகிஸ்தானில் சிறுவர்களுடன் அந்தரத்தில் தொங்கிய கேபிள் கார்

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்டுன்கா பிராந்தியம். இது கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும். இங்குள்ள பள்ளத்தாக்குகளை கடக்க பாலங்கள் அமைக்க முடியாததால், மக்கள் ஒரு மலையிலிருந்து எதிரே உள்ள மலைக்கு அந்தரத்தில் கேபிள் கார் எனப்படும் ஒரு கயிறின் மூலமாக இயக்கப்படும் சிறு வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்கின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு செல்ல கேபிள் கார் மூலமாக ஒரு மலைப்பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்வது வழக்கம். அந்த…

Read More

பொது பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

எவரேனும் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டால் அல்லது ஆதரவளித்தால், அத்தகைய தனி நபர் அல்லது அமைப்புக்கு எதிராக அந்தஸ்து பாராமல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விடுத்துள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தோட்டப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மக்களைத் தூண்டும் வகையில் மக்கள் பிரதிநிதியொருவர் பொறுப்பற்ற முறையில் தெரிவித்த கருத்து தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில்…

Read More

திருகோணலையில் இறங்குதுறை இடிந்து விபத்து

திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள இறங்குதுறையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் உள்ளிட்ட குழுவொன்று காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 15 பேர் முகாமில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முகாமைப் பார்வையிடச் சென்ற கல்கமுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்களும் அவர்களுடன் சென்ற பெரியவர்கள் குழுவும் இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

அப்புத்தளையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

அப்புத்தளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். கொழும்பு – அப்புத்தளை பிரதான வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

உலகின் மிக வேகமான பெண்மணியாக அமெரிக்காவின் Sha’Carri Richardson

அமெரிக்காவின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை Sha’Carri Richardson, உலகின் மிக வேகமான பெண்மணியாக சாதனை படைத்துள்ளார். ஹங்கேரியாவில் நடைபெறும் 2023 தடகள உலக சாம்பின்ஷிப் போட்டிகளில் மகளிருக்கான 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். போட்டியை அவர் 10.65 செக்கன்களில் நிறைவு செய்துள்ளார். இது மகளிருக்கான 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் இவ்வருடம் வீராங்கனை ஒருவர் வௌிக்காட்டிய அதிகூடிய தேர்ச்சியாகும். கடந்த முறை உலகின் மிக வேகமான பெண்மணியாக…

Read More

பங்களாதேஷுக்கு 50 மில்லியன் டொலரை மீள செலுத்திய இலங்கை

பங்களாதேஷினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி பரிமாற்ற வசதியில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை மீள செலுத்தியுள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முதல் தவணைக் கொடுப்பனவாக கடந்த 17 ஆம் திகதி குறித்த நிதி மீள செலுத்தப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஊடகப் பேச்சாளர் மெஸ்பவுல் ஹக்கை (Mezbaul Haque) மேற்கோள் காட்டி பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.  இதன் காரணமாக தமது நாட்டின் அந்நிய செலாவணியின் கையிருப்பு உயர்வடைந்துள்ளதாக பங்களாதேஷ்…

Read More