ஈரான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடன் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, அந்நாட்டு வெளியுறவுகள் அமைச்சருடனான சந்திப்பில் பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்புக்கள் , வர்த்தகம், சுற்றுலா, அறிவியல் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் உறவுகளை விரிவுபடுத்தல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அத்தோடு இவ்விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான புதிய சாத்தியமான ஒப்பந்தங்கள் தொடர்பிலும் , ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தகளை செயல்படுத்தல் தொடர்பிலும் இரு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.   மேலும் ஏனைய நாடுகளுடன் நட்பு…

Read More

மலையக மக்கள் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள ஜனாதிபதி

அனைத்து மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இதற்கான இணக்கப்பாட்டை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மலையக பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டுக்காக 3000 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது. எனவே, இந்த நிதியை எந்தெந்த திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும், இது தொடர்பான கட்சிகளின் யோசனைகள் என்ன என்பன உள்ளிட்ட விடயங்கள்…

Read More

அடுத்த வருடம் முதல் வருடத்திற்கு ஒரு தவணை பரீட்சை – கல்வி அமைச்சர்

அடுத்த வருடம் முதல் தவணைப் பரீட்சைகள் குறைக்கப்பட்டு வருடத்திற்கு ஒரு பரீட்சை மாத்திரம் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹேவாகம மாதிரி ஆரம்ப பாடசாலையின் மாணவர் தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ பதக்கங்களை அணிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Read More

5 ஆவது ஆசிய பசுபிக் மன்றத்தை இலங்கையில் நடத்தத் திட்டம்

எதிர்வரும் 2023 ஐ.நா காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் (COP 28) 28 ஆவது கூட்டத்தில், பாதிக்கப்படக்கூடிய மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான காலநிலை நியாய மன்றத்தை (Climate Justice Forum) இலங்கை ஆரம்பிக்கத் தயாராக உள்ளது என்று சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். காலநிலை நீதியை உறுதிப்படுத்துதல், இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு நிதியளிப்பதை துரிதப்படுத்துவதற்கு பாரம்பரியமற்ற மாற்று அணுகுமுறையை பேணும் பொதுவான நோக்கத்துடன், காலநிலை நியாய மன்றம் (Climate Justice Forum) ஒன்றை…

Read More

பாகிஸ்தான் ரயில் விபத்தில் 25 பேர் பலி

பாகிஸ்தான், தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் சஹாரா ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கராச்சியில் இருந்து அபோதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டதில் எட்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி விபத்துக்குள்ளனது. இதில், ரெயிலில் பயணித்த 25 பேர் உயிரிழந்தனர். மேலும், 80 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு குழுக்கள் விரைந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும்,…

Read More

இம்ரான் கானுக்கு மூன்று வருட சிறை – நீதிமன்றம் தீர்ப்பு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றம் மூன்று வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.  அத்தோடு, அவர் ஐந்து வருடங்கள் அரசியலில் ஈடுபடுவதற்கும் தடைவிதித்துள்ளது. 

Read More

மீண்டும் இலங்கை வரும் சச்சின்?

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் யுனிசெப் சிறுவர் அமைப்பின் தெற்காசியாவுக்கான பிராந்திய நல்லெண்ண தூதுவராக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் அமைப்பான யுனிசெப் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள அவர் , சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கைக்கான விஜயம் தொடர்பான அறிக்கையை அவர் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: வாபஸ் பெறப்பட்டது ஊரடங்கு தளர்வு

மணிப்பூரில் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. க்வாக்டா பகுதியில் தான் இந்தக் கலவரம் நடந்துள்ளது. கலவரத்தால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் அது வாபஸ் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு பகுதிகளில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு திரும்பப்பெறப்பட்டுள்ளது. இது குறித்து பிஷ்ணுபூர் காவல்துறை தரப்பில், “மத்தியப்…

Read More

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

அவதூறு வழக்கில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி நிராகரித்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல்…

Read More

13 ஆவது திருத்தம் : கட்சித் தலைவர்களுக்கு விசேட அறிவித்தல்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் 15-08-2023 ஆம் திகதிக்கு முன்னதாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் பரிந்துரைகளையும் முன்மொழிவுகளையும் பெற்றுத்தருமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கட்சிகள் மற்றும் குழுக்களின் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 26-07-2023 அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கூட்டப்பட்டிருந்த சர்வகட்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களுக்கு அமைவாக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read More