அமெரிக்க தூதுவருக்கு எதிராக முறைப்பாடு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie J. Chung, வியானா உடன்படிக்கையின் இராஜதந்திர எல்லைகளை  மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டி தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பினர்  வெளிவிவகார அமைச்சிடம் கடிதமொன்றை இன்று கையளித்தனர். 66 அமைப்புகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டதாக கூறப்படும் இந்த கடிதத்தின் பிரதியை தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் வெளிவிவகார அமைச்சுக்கு சென்று கையளித்தனர்.  வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதியொருவர் கடிதத்தை பெற்றுக்கொண்டார். 

Read More

குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைகளை தொல்பொருள் திணைக்களம் மதித்து நடக்கவில்லை – முல்லைத்தீவு நீதிமன்றம்

குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை என முல்லைத்தீவு நீதிமன்று கட்டளை வழங்கியுள்ளது.  முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கின் கட்டளைக்காக இன்று வியாழக்கிழமை (31) திகதி யிடப்பட்டிருந்தது. அந்த வகையிலே இன்றைய தினம் (31) குருந்தூர் மலை தொடர்பிலான AR/673/18…

Read More

உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதே நிலையான சமாதானத்தை அடைவதற்கான வழி ; அமெரிக்கா

இலங்கையைப் பொறுத்தமட்டில் கடந்தகால வடுக்களை ஆற்றுவதற்கும், நீடித்த சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதிப்படுத்தவேண்டியது இன்றியமையாததாகும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.  இலங்கைக்கு வருகைதந்துள்ள அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலெனுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான நேற்று புதன்கிழமை (30) கொழும்பில் நடைபெற்றது. கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இச்சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டோர்…

Read More

சார்க் ஊடகவியலாளர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் மானிப்பாய் மகளிர் கல்லூரியில் ‘ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம்’ கருத்தரங்கு

சார்க் ஊடகவியலாளர்கள் மன்றத்தின் இலங்கைக் கிளையின் ஏற்பாட்டில் யாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியில் ‘ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு கடந்த 28ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது. சார்க் ஊடக அமைப்பின் இலங்கைக்கான பொருளாலர் வீரகேசரி நாளிதழின் உதவி செய்தி ஆசிரியருமான திரு.எஸ்.லியோ நிரோஷ தர்ஷன் மற்றும் கல்லூரி அதிபர் திருமதி.சூரியராசா , உள்ளிட்டவர்களால் மங்கள விளக்கேற்றப்பட்டு கருத்தரங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் ஆரம்ப உரையாற்றிய கல்லூரி அதிபர் திருமதி.சூரியராசா , இன்றைய சமூகத்தில் இளம்…

Read More

காணாமல்போன 10 பேர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர் : ஆனால் விபரங்கள் இல்லை ?

காணாமல்போன பத்துபேரை கண்டுபிடித்ததாக இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அவர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல்கள் எவையும் எங்களிடம் இல்லை. என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வவுனியாவில் அவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை இன்று நாம் நினைவுகூருகிறோம். சுமார் 30 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தமிழர்கள் இனப்…

Read More

காணாமலாக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தில் யாழிலும் ஆர்ப்பாட்டம்  

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமான இன்று (30) காலை யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்ட பேரணியொன்றை முன்னெடுத்தனர். வடக்கு, கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இந்த போராட்டம் இடம்பெற்றது. யாழ். பேருந்து நிலையத்தில் ஆரம்பமான இப்போராட்டம் அங்கிருந்து பேரணியாக யாழ்ப்பாண நகரைச் சுற்றி, யாழ்ப்பாணம் முனியப்பர் கோவிலடி வரை சென்று நிறைவு பெற்றது.

Read More

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வினை பெற்றுக்கொள்வதில் ஐ.நாவின் தலையீடு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் – சம்பந்தன் வலியுறுத்தல்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடும் வகிபாகமும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் – அன்ட்ரூ ப்ரான்ஸிடம் இலங்கைத் தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மார்க்-அன்ட்ரூ ப்ரான்ஸ் கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு முக்கிய தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்துவருகின்றார். அந்த வகையில் மார்க்-அன்ட்ரூ…

Read More

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் – ஐ.நா. வலியுறுத்தல்

வலிந்து காணாமலாக்கப்படுதல் குறித்த பாரம்பரியத்திற்கு தீர்வை காண்பது வெறுமனே நீதியுடன் தொடர்புபட்ட விடயம் மாத்திரமில்லை ; முன்னேற்றம் பேண்தகு அபிவிருத்தி போன்ற பாதையை இலங்கை உருவாக்குவதற்கும் மிகவும் அவசியமானது என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தரவதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ரூ பிரான்ஸ் தெரிவித்துள்ளார் அறிக்கையொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. உலகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை குறிக்கும் நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை இந்த ஈவிரக்கமற்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் -தங்கள் அன்புக்குரியவர்கள் எப்படி உள்ளனர் அவர்களுக்கு என்ன நடந்தது…

Read More

நளினியின் கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பில் 4 வாரங்களில் தீர்மானிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று முன் விடுதலையான நளினியின் கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பில் 4 வாரங்களில் தீர்மானிக்குமாறு பிராந்திய கடவுச்சீட்டு அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 32 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர் விடுதலையான நிலையில், லண்டனில் வசிக்கும் தனது மகளுடன் வசிக்க விரும்புவதாகவும் அங்கு செல்வதற்காக கடவுச்சீட்டைக் கோரி ஒன்லைன் மூலமாக ஜூன் 12 ஆம் திகதி விண்ணப்பித்ததாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள…

Read More

பிரக்ஞானந்தாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

உலகக்கிண்ண சதுரங்க தொடரில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்திய கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவிற்கு  பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரக்ஞானந்தாவினால் தேசத்திற்கு பெருமை கிடைத்துள்ளதாகவும் இதுவொரு சிறிய சாதனை அல்லவெனவும் எதிர்வரும் போட்டிகளில் வெற்றியை பதிவு செய்வதற்கு தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் பாரத பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 18 வயதான கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து ஒவ்வொரு இந்தியரின்…

Read More