ஈரானில் பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து தற்கொலை படையினர் தாக்குதலில் 2 பொலிஸார் பலி

ஈரானின் சிஸ்டான் மாகாணம் ஜாஹேடான் பொலிஸ் நிலையத்துக்குள் தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இதன் போது இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். அத்தோடு 4 பயங்கரவாதிகளும் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதனால் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒக்டோபர் மாதம் ஷிராஸ் நகரில் உள்ள ஷா செராக் மசூதியை தாக்கிய இருவர் கடந்த வாரம் தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை…

Read More

அமெரிக்க நிதி அமைச்சர் வருகையை எதிர்த்து தாய்வான் எல்லையில் 13 விமானங்களை பறக்க விட்ட சீனா

தாய்வானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்ற நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வரும் சீனா, வேறு எந்த நாடும் தாய்வானுடன் வர்த்தகம், தூதரக உறவுகளை மேற்கொள்ளக்கூடாது என எச்சரித்துள்ளது. ஆனால் தைவானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது. அடிக்கடி தனது நாட்டின் பிரதிநிதிகளை தைவானுக்கு அனுப்பி தனது ஆதரவை உறுதி செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது அமெரிக்க நிதி அமைச்சர் யெல்லன் தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் போது 36 ஆயிரம் கோடி மதிப்பிலான துப்பாக்கி, பீரங்கி…

Read More

28ஆம்  திகதி  வரை உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் – பரீட்சை திணைக்களம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலை முறைமையில் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய சகல விண்ணப்பதாரிகளும் நிகழ்நிலை முறைமையில் மாத்திரம் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களுக்கு (www.doenets.lk , www.onlineexams.gov.lk) பிரவேசித்து விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி செயலியான ‘DoE’ இன் ஊடாக அறிவுறுத்தல்களை நன்கு வாசித்து அதற்கமைய சரியாக தமது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரச…

Read More

பெண் மரணம்: விசாரணைகளை முன்னெடுக்க விசேட வைத்திய நிபுணர்கள் குழு நியமனம்

கண் சத்திரசிகிச்சையின் பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய  குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் A.R.M. தௌபிக் தெரிவித்தார்.  எவ்வாறாயினும், கண் வில்லை பொருத்தும் சத்திரசிகிச்சைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.  கண் சத்திரசிகிச்சையின் பின்னர் 34 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார்.  கொஸ்கொட – பொரலுகெட்டிய பகுதியை சேர்ந்த 34 வயதான ஹிமாலி வீரசிங்ஹ எனும் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே…

Read More

பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிரான மனு மீது விசாரணை

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (07)  மூன்றாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது அரசாங்கத்தில் நிதி அமைச்சர்களாக பணியாற்றிய பசில் ராஜபக்ஸ, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், பேராசிரியர் W.D.லக்‌ஷ்மன், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தர மற்றும் அப்போதைய அமைச்சரவைக்கு எதிராகவே…

Read More

எனக்கு வாய்ப்பு தராத முன்னணி நடிகர்கள் – ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம்

தமிழில் அட்டகத்தி, பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, காக்கா முட்டை, தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, பர்ஹானா உள்பட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலேயே நடிக்கிறார். முன்னணி கதாநாயகர்களுடன் அவர் நடிக்கவில்லை. இதற்கான காரணம் குறித்து சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “காக்கா முட்டை படத்தில் நடித்த பிறகு நடிகர்கள் பலர் என்னை பாராட்டினர். ஆனால் யாரும் அவர்களின் படங்களில் நடிக்க…

Read More

நெதர்லாந்து பிரதமர் திடீர் இராஜினாமா

நெதர்லாந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர் தொடர்பான சட்ட மூலம் தொடர்பில் கூட்டணி கட்சிக்குள் நிலவிய குழப்ப நிலையால் நெதர்லாந்து பிரதமர் மார்க் இராஜிநாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவியை மார்க் ரூட் இராஜினாமா செய்த நிலையில் 150 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Read More

கிளிநொச்சியில் ஓ.எம்.பி. அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு

கிளிநொச்சியில் காணாமல் போனோரை பதிவு செய்யும் அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். குறித்த அலுவலகத்தில் காணாமல் போனோர் பற்றிய பதிவுகளை மேற்கொள்ளும் செயற்பாடுகள் இன்று (08) காலை ஆரம்பமாகியது. எனினும் இதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன் குறித்த அலுவலகத்தினால் பதிவுகளுக்கு அழைக்கப்பட்டிருந்த அழைப்பு கடிதங்களையும் அலுவலகத்தின் முன் தீயிட்டுக் எறித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பெருமளவான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Read More

13 ஐ அமுல்படுத்த இலங்கையை வலியுறுத்துமாறு கனடாவிடம் கோரிக்கை

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்த சர்வதேச நாடுகள் இலங்கையை வலியுறுத்த வேண்டுமென சில தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகார பணிப்பாளர் நாயகம் Marie-Louise Hannan-இடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் , தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்  தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் , தமிழீழ விடுதலை இயக்கத்தின்  தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூட்டாக கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகார பணிப்பாளர்…

Read More

இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வருகின்றார்

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே இந்திய வெளிவிவகார செயலாளரின் இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. ஜனாதிபதி 20ம் திகதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

Read More