முதலீட்டு சபை – சினொபெக் நிறுவனத்துக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை முதலீட்டு சபை மற்றும் சினொபெக் எனர்ஜி லங்கா தனியார் நிறுவனம் என்பவற்றுக்கிடையில் இலங்கையில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அமைத்து , எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் நேற்று வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்துக்கமைய சினொபெக் நிறுவனம் 100 மில்லியன் டொலர் முதலீட்டில் எரிபொருள் இறக்குமதி , களஞ்சிப்படுத்தல் மற்றும் விநியோகம் உள்ளிட்டவற்றை முன்னெடுக்கவுள்ளது. அதற்கமைய தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் 150 தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் மேலும் 50…

