400×4 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு பதக்கம்!

2023 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 400×4 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றுள்ளது. போட்டித் துரத்தை இலங்கை அணி 3:15.41 நிமிடங்களில் நிறைவு செய்து இரண்டாம் இடத்தை பெற்றது. போட்டியில் இந்தியா முதலாம் இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தையும், ஜப்பான் மூன்றாம் இடத்தை பெற்றுக் வெங்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டன. இந்த போட்டித் தொடர் தாய்லாந்தின் பேங்கொக்கில் நடைபெற்று வருகிறது.

Read More

யாழ். மக்களுக்கான வாய்ப்பு!

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் பெயார்-2023 நேற்று (15) யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் ஆரம்பமானது.குளோபல் பெயார் இன்றும் (16) இரண்டாவது நாளாக நடைபெறவுள்ளது.ஆரம்ப நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின்…

Read More

இலங்கை விமானிகளின்றி பறக்கவுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்?

அனைத்து விமானிகளும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விட்டு வெளியேறினாலும், வெளிநாட்டு விமானிகளை அமர்த்தி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்தும் இயக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மறுசீரமைப்பில், நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளை எடுப்பதற்கு முதலீட்டாளர்களுக்கு முழு உரிமை வழங்கப்படும் என தெரிவித்தார். 260 விமானிகள் கொண்ட குழு…

Read More

இதய அறுவை சிகிச்சைக்கான காத்திருப்பு பட்டியலில் 2,000 சிறுவர்கள்

இதய அறுவை சிகிச்சைகளுக்காக 2,000 வரையிலான சிறுவர்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்தது. வைத்தியசாலையின் இதய நோய் பிரிவின் மருத்துவ ஊழியர்கள் குழாம் நாளொன்றுக்கு 05 அறுவை சிகிச்சைகள் வீதம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக, அதன் பணிப்பாளர் வைத்தியர் G.விஜேசூரிய குறிப்பிட்டார். மருத்துவ ஊழியர்கள் குழாம் இதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதிலும், பௌதீக வளங்கள் பற்றாக்குறையினால் இதய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாதுள்ளதாக அவர் கூறினார். இதற்கான தீர்வாக…

Read More

கட்சி பேதமின்றி தேர்தலுக்காக ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அரசாங்கம் பல்வேறு பொய்யான காரணங்களை முன்வைத்து மக்களை ஏமாற்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்துள்ளது. எனினும் அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத முயற்சிகளை முறியடித்து தேர்தலை நடத்துமாறு கட்சி பேதமின்றி அனைவரும் இணைந்து குரலெழுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எதிர்க்கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர்…

Read More

கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை மீள ஆரம்பம்

அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (15) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.  இதற்கமைய, கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் M.J.இந்திபொலகே தெரிவித்தார்.  வடக்கு ரயில் மார்க்கத்தின் அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்ட திருத்தப்பணிகளால், ஜனவரி  5 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை –  காங்கேசன்துறைக்கு இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம்…

Read More

இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் இன்று சனிக்கிழமை (15) தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள், குழந்தைகள் என இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் யாழ்ப்பாணம் கடற்கரையில் இருந்து புகலிடம் தேடி அகதிகளாக நேற்றிரவு சுமார் 8 மணியளவில் பைபர் படகில் புறப்பட்டு இன்றைய தினம் அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனையை சென்றடைந்தனர். தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு ராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து…

Read More

தெமோதரை பகுதியில் பஸ் விபத்து : 15 பேர் காயம்!

பதுளை, தெமோதரை ஹாலி எல பகுதியில் இன்று சனிக்கிழமை (15) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.  கொழும்பு – பதுளை தனியார் பஸ்  ஒன்றே வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  மேலதிக விசாரணைகளை ஹாலி எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கலைப்பிரிவில் கற்வர்களுக்கு தாதியர் பயிற்சி – ஜனாதிபதியின் விசேட ஆலோசனை

தாதியர் ஆட்சேர்ப்பின்போது கலைப் பிரிவில் கல்வி கற்றாலும் தாதியர் பயிற்சியில் உள்வாங்கக் கூடிய வகையில் விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். சுகாதாரத்துறை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக 2024 ஆம் ஆண்டு இறுதி வரை வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதை 63 வரை நீடிக்கவும், விசேட சந்தர்ப்பங்களில் சுகாதார…

Read More

சர்வதேச பல்கலைக்கழகங்களின் கிளைகளை இலங்கையில் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை- இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்

சர்வதேச பல்கலைக்கழகங்கள் மூன்றின் கிளைகளை இலங்கையில் அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் இரு பல்கலைக்கழகங்கள் இதற்கு இணக்கம் தெரிவிக்கும் வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அத்தோடு பல்கலைக்கழகங்களுக்குள் அரசியல் செயற்பாடுகள் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர் , கல்வியுடன் தொடர்புடைய எந்தவொரு கோரிக்கை குறித்தும் மாணவர்களுடன் கலந்துரையாட தாம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்…

Read More