தென்னிலங்கையில் பாதிப்பு ஏற்படாத வகையில் 13ஐ அமுல்படுத்த முழுமையான ஆதரவு – சுதந்திர கட்சி அறிவிப்பு

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் தற்போதும் உறுதியாகவுள்ளோம். எனினும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் போது , அது தென்னிலங்கையில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது தொடர்பில் சிந்தித்து மிக அவதானத்துடன் தீர்மானிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இந்த கொள்கை ரீதியான நிலைப்பாட்டுடன் இன்றைய சர்வகட்சி மாநாட்டில் சுதந்திர கட்சி பங்கேற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பிலுள்ள சு.க….

Read More

பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமம்தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; அரசாங்கம் உறுதி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச் காணி வழங்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானமாகும். இந்தக் காணி உரிமத்தை வழங்குவதில் தற்போது காணப்படும் நடைமுறை சிக்கலுக்கு விரைவில் தீர்வு காணப்படும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்விடயத்தில் அவதானத்துடனும் , உணர்வுபூர்வமாகவும் செயற்பட்டு வருவதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமம் இல்லாத விடயம் கவலைக்குரியது. இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கமும் , பெருந்தோட்ட நிறுவனங்களும் இணைந்து செயற்பட வேண்டியது…

Read More

தொழில்நுட்பக் கோளாறு ! பிரதான ரயில் சேவைக்குப் பாதிப்பு !

ரம்புக்கனைக்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெயங்கொடை புகையிரத நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரதான ரயில் சேவைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, புகையிரத சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று (24) காலை சேவையில் ஈடுபடவிருந்த 11 ரயில் சேவைகள் இரத்தாகியுள்ளன. இதனால் ஏனைய ரயில் சேவைகள் தாமதமாகும் சாத்தியம் உள்ளதாக ரயில்வே திணைக்களம் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Read More

Q.R. கோட்டா அதிகரிக்கப்படுமா?

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருட்களின் அதிகபட்ச விலைகளை மாத்திரம் தீர்மானிக்கக் கூடியவாறு புதிய எரிபொருள் சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக , விரைவில் கியூ.ஆர். கோட்டாவை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , இம்மாதம் முதல் எரிபொருளுக்கான புதிய விலை சூத்திர முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதாவது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால்…

Read More

இந்திக்கு செல்லும் கீர்த்தி சுரேஷ்?

கீர்த்தி சுரேசிடம் இந்தி படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் விஜய் நடித்த தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவான் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இதில் நாயகியாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷையும் தெறி இந்தி ரீமேக்கில் நடிக்க படக்குழுவினர் அணுகி உள்ளனர். படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். எனவே ஜான்வி கபூர், கீர்த்தி சுரேஷ் இருவரும் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Read More

வெப் தொடரில் இணையும் வாணி போஜன் – யோகி பாபு

வாணி போஜனும் யோகிபாபுவும் இணைந்து புதிய வெப் தொடரில் நடிக்கிறார்கள். சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல் ஆகியோரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த தொடரை பிரபல டைரக்டர் ராதா மோகன் இயக்குகிறார். இவர் மொழி உள்ளிட்ட பல வெற்றி படங்களை டைரக்டு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடருக்கு சட்னி சாம்பார் என்று பெயர் வைத்துள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர் நேஷனல் பட நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பில் யோகிபாபு கூறும்போது, ‘சிறியவர்கள் முதல்…

Read More

விமான விபத்தில் அரசியல்வாதிகள் ஐவர் பலி.!

மத்திய கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து அரசியல்வாதிகள் மற்றும் ஒரு விமானி என 6 பேர் நேற்று உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த ஐந்து பேரும் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ராட்டிகோவின் உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் போயாகா துறையில் சான் லூயிஸ் டி காசினோ என்ற முனிசிபல் பகுதியில் சிறியரக விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், விமானம் விலாவிசென்சியோவில் இருந்து…

Read More

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு ; பாதாள உலகக் குழு உறுப்பினர் பலி!

மினுவாங்கொடை – மஹகம பகுதியில் இன்று வியாழக்கிழமை (20) அதிகாலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மினுவாங்கொடை – மஹகம பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் மீது குறித்த சந்தேகநபர், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதன் போது விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பதில் துப்பாக்கிப்பிரயோகத்தின் போதே சந்தேகநபர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த 29 வயதான பாதாள உலகக் குழு உறுப்பினரான மனிக்குகே கசுன் லக்சித…

Read More

ஜனாதிபதி ரணில் இன்று டெல்லி விஜயம்; நாளை பிரதமர் மோடியை சந்திப்பார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை மதியம் 1.30க்கு இந்தியா செல்லவுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இது அமைந்துள்ளது. தனது டெல்லி விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரையும்…

Read More

உயர்தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக இணையவழியூடாக விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளல் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமானது. எதிர்வரும் 28ஆம் திகதி நள்ளிரவுடன் இந்த கால அவகாசம் நிறைவடையவுள்ளது. எனவே மேற்குறிப்பிடப்பட்ட கால அவகாசத்துக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். எந்தவொரு காரணத்துக்காகவும் முதன்முறையாக பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு இந்த கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது. எவ்வாறிருப்பினும் இரண்டாவது முறை அல்லது மூன்றாவது…

Read More