கொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கொழும்பு – வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மார்டிஸ் லேன் பகுதியில் இன்று மாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீதியின் அருகில் நின்றிருந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Read More

பட்டதாரிகளுக்கான விசேட அறிவிப்பு!

புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களுக்கு புதிய பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேவேளை, நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை இணைப்பது தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விசேட அறிவிப்பு

குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களை முறையாக பேணுவதற்கு தேவையான முன்பதிவுகளை செய்யுமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடமும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதிய எரிபொருள் இருப்பு உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 101 எரிபொருள் நிலையங்கள் 92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் 61 எரிபொருள் நிலையங்கள் லங்கா ஒட்டோ டீசலையும் 50 வீத குறைந்தபட்ச கையிருப்பை…

Read More

தமிழக முதல்வருடன் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையில் நேற்று (29) காலை சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  தமிழக முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மலையக பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டிற்கு தமிழக அரசாங்கத்தின் பங்களிப்பு அவசியம் என  நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதுவர் D.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

Read More

இலகு ரயில் திட்டத்தை எனது அரசாங்கத்தில்  மீண்டும் நடைமுறைப்படுத்த ஜப்பானுடன் கைகோர்க்க எதிர்பார்க்கின்றேன் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 

குறுகிய அரசியல் தீர்மானங்களினால் இலகு ரயில் திட்டம்  இடைநிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சூழ்நிலைக்கு வருத்தம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், தனது அரசாங்கத்தின் கீழ் இத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த ஜப்பானுடன் கைகோர்க்க எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.  இதன் போதே எதிர்க்கட்சி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இச்சந்திப்பில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்று ரீதியாக நிலவிவரும் நட்புறவு ரீதியிலான இராஜதந்திர…

Read More

தீயணைப்பு பணியில் ஈடுபட்ட விமானம் விபத்து : இரு விமானிகள் பலி

கிரீஸ் நாட்டின் எவியா தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைப்பதற்காக சென்ற அந்நாட்டு விமான படையை சேர்ந்த கனடைர் சி.எல்.-215 என்ற நீர் தெளிக்கும் விமானம் பிளாடனிஸ்டோஸ் என்ற பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இதன் போது விபத்துக்கு உள்ளான குறித்த விமானத்திலிருந்த கேப்டன் (வயது 34), துணை விமானி (வயது 27) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக 3 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வல்வெட்டித்துறையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி , தங்கத்துரை, ஜெகன், தேவன் உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளின் நினைவாக மலர் தூபி , பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறையில் இருந்த சிங்கள சிறைக்கைதிகள் , சிறைக்காவலர்கள் உள்ளிட்ட தரப்பினர் மோசமான தாக்குதல்களை…

Read More

ஜஸ்டின் ரூடோவின் கருத்தை மீண்டும் மறுத்தது இலங்கை!

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 23ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் குறித்து வெளியிட்டுள்ள கருத்தை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் கடந்த கால மோதல்கள் பற்றிய தவறான, திரிபுபடுத்தப்பட்ட கதையை கனடா தொடர்ந்து குறிப்பிடுவது உள்ளூர் வாக்கு வங்கி தேர்தல் ஆதாயங்களை மட்டுமே இலக்காகக் கொண்டது. மேலும் இது பரந்த இன நல்லிணக்க இலக்குகளுக்கு உகந்ததாக இல்லை. இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து சமூகங்கள் மற்றும்…

Read More

லிந்துலையில் தீ விபத்து ; 10 வீடுகள் தீக்கிரை

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை – இராணிவத்தை தோட்டத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இதனால் குறித்த வீடுகளில் வசித்த 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை என தெரிவித்துள்ள லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

நாட்டு மக்களுக்காகவே  சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ள தீர்மானித்துள்ளோம் – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

நாட்டு மக்களின் நலன் தொடர்பில் சிந்தித்து இன்றைய சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ள நாம் தீர்மானித்துள்ளோம். எனினும் இந்த மாநாடு வழமையான அரசியல் விளையாட்டாகக் காணப்படும் பட்சத்தில் கலந்துரையாடலிலிருந்து வெளிநடப்பு செய்ய பின்வாங்கப் போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படும் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் 73 ஆவது கட்டமாக பிபில மெதகம தேசிய பாடசாலைக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை…

Read More