முதல் சுற்றிலேயே வீழ்ந்தார் பி.வி.சிந்து
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் கிடாம்பி ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினர். தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 15-ம் நிலை வீராங்கனையான கனடாவின் மிட்செல்லி லியுடன் மோதினார். ஒரு மணி நேரம் 4 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 8-21, 21-18, 18-21 என்ற செட்…

