சர்வதேச தடகளப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய விவசாயி மகன்
கிரீஸ் நாட்டில் நடந்த சர்வதேசப் போட்டியில் மும்முறை நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் மதுரை விவசாயியின் மகன் செல்வபிரபு திருமாறன். மதுரை ஊமச்சிகுளம் அருகே கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருமாறன். இவரது மனைவி சுதா. மகன்கள் ராஜபிரவீன் (20), செல்வ பிரபு (18). கால்பந்து வீரரான ராஜபிரவீன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து வருகிறார். இளைய மகன் செல்வ பிரபு, திருச்சி பிஷப் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார்….

