யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து வாரத்தின் 7 நாட்களும் விமான சேவைகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.  தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.  இந்த கடன் உதவி…

Read More

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசினுடைய இனவாத கோரமுகத்தின் மற்றொரு வெளிப்பாடேயாகும்! – சீமான் கடும் கண்டனம்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசினுடைய இனவாத கோரமுகத்தின் மற்றொரு வெளிப்பாடேயாகும்! – என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான அன்புச்சகோதரர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களைச் சுட்டுப் படுகொலை செய்வதற்கு இலங்கை புலனாய்வுத்துறையினர் முயன்றுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சமகால அரசியல் சூழலில் ஈழத்தமிழ் மக்களுக்கு இலங்கை…

Read More

தேர்தல், அரசியல் மீது பொதுமக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர் – ஜனாதிபதி

பாராளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50% பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெக்க சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தற்போதும் இந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலில் நடைபெற்ற “2023/ 2024 தேசிய சட்ட மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு…

Read More

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல கொடியேற்றம் இன்று

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் திருவிழா இன்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்றத்திற்கு முன்னதாக காலை 6 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. கொடியேற்றத்தை அடுத்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தினந்தோறும் மாலை 6 மணிக்கு திருவிழாவுக்கான வழிபாடுகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன. எதிர்வரும் 12 ஆம் திகதி இரவு 7 மணிக்கு கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நற்கருணை ஆராதனை நடைபெறும்.  திருவிழா தினமான 13 ஆம் திகதி அதிகாலை…

Read More

நான் வடிவேலுவின் ரசிகன்: மாமன்னன் பாடல் வெளியீட்டு விழாவில் கமல் நெகிழ்ச்சி

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாமன்னன். பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரித்துள்ளது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இது என் கடைசி படம் என்று சொல்லித்தான் மாரி செல்வராஜிடம் கதை…

Read More

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் மெர்டன்ஸ்: பெகுலா, ருப்லேவ் அதிர்ச்சி

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டன்ஸ் 4வது சுற்றுக்கு முன்னேறினார். மூன்றாவது சுற்றில்அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவுடன் (29 வயது, 3வது ரேங்க்) நேற்று மோதிய மெர்டன்ஸ் (27 வயது, 28வது ரேங்க்) 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.இப்போட்டி 1 மணி, 22 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 3வது சுற்றில் களமிறங்கிய பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா…

Read More

விமானப்படை பட்டமளிப்பு விழாவில் தவறி கீழே விழுந்த பைடன்

அமெரிக்க விமானப்படை அகாடமி பட்டமளிப்பு விழாவில் ஜோ பைடன் திடீரென தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க வரலாற்றில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மிக வயதான அதிபராக ஜோ பைடன் இருந்து வருகிறார். அவர் கொலராடோவில் உள்ள அமெரிக்க விமானப்படை அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது விழா மேடையின் அருகே நடந்து சென்ற போது ஜோ பைடன் திடீரென தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் துரிதமாக செயல்பட்ட விமானப்படை…

Read More

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களை இலக்குவைத்து மோசடிகள்

கனடாவில் கல்விபயிலும் வெளிநாட்டு மாணவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் தொலைபேசி மூலமான மோசடிச்சம்பவங்கள் அதிகரித்துவருவதாகத் தெரிவித்துள்ள கனேடிய அரசாங்கம், தொலைபேசி வாயிலாக தாம் எந்தவொரு கட்டணத்தையும் கோருவதில்லை என்றும், எனவே இத்தகைய மோசடிகள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நாடுகளைச்சேர்ந்த மாணவர்கள் பலர் கனடாவில் கல்விபயின்று வருவதுடன், குறிப்பாக பெருமளவான இலங்கையர்கள் கனடாவில் உயர்கல்வி பயில்கின்றனர்.  இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்டவாறான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டிருக்கும் கனேடிய அரசாங்கம், இவ்வாறான மோசடிகள் இடம்பெறும் முறைகள் மற்றும் அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளக்கூடிய…

Read More

இனவாத கருத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – கரு ஜயசூரிய

இனவாத மற்றும் மதவாத கருத்துகளால் நாடு மீண்டும் அனர்த்தத்தை நோக்கி பயணிக்கக்கூடும். அதுபோன்ற நிலையை தடுப்பது ஒட்டுமொத்த நாட்டினதும் பொறுப்பாகும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கருஜசூரிய தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு தரப்புகள் மேற்கொண்டு வரும் சில கருத்து தெரிவிப்புகள் மற்றும் அத்துடன் தொடர்புபட்ட பல்வேறு செயல்கள் தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் உன்னிப்பான கவனம் செலுத்தியதுடன், இவை நாட்டை…

Read More

கேஸ் விலை 400 ரூபா அளவில் குறைப்பு

12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபா அளவில் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (04) நள்ளிரவு முதல் குறித்த விலை திருத்தம் அமுல்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 3,638 ரூபா என்பது குறிப்பிடத்தக்ககது

Read More