பிரபல நடிகையின் பயோபிக்கில் ஊர்வசி ரவுதெலா

பிரபல இந்தி நடிகை பர்வீன் பாபி. கடந்த 1973-ம் ஆண்டு வெளியான ‘சரித்ரா’ என்ற இந்தி படத்தில் கிரிக்கெட் வீரர் சலீம் துரானியுடன் அறிமுகமானார். தொடர்ந்து தீவார், அமர் அக்பர் அந்தோணி, சுஹாக், ஷான், காலியா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். 70 மற்றும் 80-களில் இந்தி திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த பர்வீன் பாபி, அப்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை. திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த இவர், கடந்த 2005-ம்…

Read More

Lust Stories 2 | கஜோல், தமன்னா, மிருணாள் தாக்கூர் நடிக்கும் ஆந்தாலஜியின் டீசர் எப்படி?

கஜோல், தமன்னா, மிருணாள் தாக்கூர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ ( Lust Stories 2) ஆந்தாலஜி சீரிஸின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற தலைப்பில் இந்தி ஆந்தாலஜி சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகியோர் இயக்கத்தில் வெளியான இந்த ஆந்தாலஜியில் ராதிகா ஆப்தே, மணிஷா கொய்ராலா, க்யாரா அத்வானி, புமி பட்னேகர்,…

Read More

பார்சிலோனா அணிக்கு வர விரும்புகிறார் மெஸ்ஸி – தந்தை சூசகம்

கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி மீண்டும் பார்சிலோனா அணியில் இணைந்து விளையாட விரும்புவதாக அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பார்சிலோனா கிளப் அணியின் தலைவர் ஜோன் லபோர்தாவுடன், ஜார்ஜ் மெஸ்ஸி பேசியுள்ளார். “லியோ (மெஸ்ஸி) மீண்டும் பார்சிலோனா அணிக்கு வர விரும்புகிறார். எனக்கும் அவர் அதை செய்வதில் விருப்பம் உள்ளது. நிச்சயம் இந்த நகர்வை எங்கள் தரப்பில் முன்னெடுப்போம்” என பத்திரிகையாளர் ஒருவரிடம் ஜார்ஜ் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். ‘அது அத்தனை…

Read More

உக்ரைன் போரில் 500 குழந்தைகளை ரஷ்யா கொன்றது: ஜெலன்ஸ்கி

உக்ரைன் மீதான போரில் ரஷ்யா குறைந்தது 500 குழந்தைகளைக் கொன்றுள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், “உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 16 மாதங்கள் ஆகின்றன. குறைந்தது 500 உக்ரேனிய குழந்தைகளை ரஷ்யா கொன்றது. ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் வெறுப்பு, ஒவ்வொரு நாளும் உக்ரேனிய குழந்தைகளின் உயிரைப் பறித்து அழித்துக் கொண்டே இருக்கிறது. பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா உக்ரைனின் மீது படை…

Read More

இந்தியாவில் ஜனநாயகம் துடிப்புடன் உள்ளது: அமெரிக்கா

இந்தியாவில் ஜனநாயகம் துடிப்புடன் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பே, நேற்று(ஜூன்5) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம். புதுடில்லிக்குச் செல்லும் எவரும் அதைத் தாங்களாகவே பார்க்க முடியும். பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் அமெரிக்காவுக்கு மேற்கொள்ள இருக்கும் அரசுமுறைப் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான நட்பை முன்னோக்கி கொண்டு செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியா சென்ற…

Read More

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரண்; உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள்  அரசியலமைப்புக்கு முரணானது. என்றாலும் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள திருத்தங்கள் சட்டமூலத்தில் மேற்கொண்டால் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை அரசியலமைப்புக்கு ஒத்திசைவாக அமைத்துக்கொள்ளலாம் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) சபாநாயகரின் அறிவிப்பின்போதே இதனை அவர் சபைக்கு அறிவித்தார். சபாநாயகர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு எனும்…

Read More

அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக சட்டம் ஏன் சரியாக அமுல்படுத்தப்படவில்லை? – சஜித் கேள்வி

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பல சரத்துக்கள் உள்ள போதிலும் அண்மையில் விமான நிலையத்தில் சட்டவிரோத தங்கம் மற்றும் பொருட்களுடன் பிடிபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ஏன் சட்டம் உரிய முறையில் பிரயோகிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (6) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். 4.611 கிலோ தங்கத்தை (80 மில்லியன் பெறுமதி) கொண்டு வந்த நபருக்கு 70 மில்லியன் ரூபா…

Read More

மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்

மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்கால பாதையை மாற்றுவதற்கான தருணமே இது. மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் நுவரெலியா மாவட்டத்துக்கு களப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர், பல தரப்பு சந்திப்புகளில் ஈடுபட்டதுடன், மக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் சந்தித்து பேச்சு நடத்தினார். இவ்விஜயத்தின் ஓரங்கமாக…

Read More

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கானசெயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும்என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா கிரேண்ட ஹோட்டலில் நடைபெற்ற சட்டத்தரணி கள் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு…

Read More

போதகர் ஜெரோமின் மனைவி, பிள்ளைகள் நாடு திரும்பினர்

பௌத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வு கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவியும் பிள்ளைகளும் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. சிங்கப்பூரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (02) இரவு சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ் விமானம் SQ-468 மூலம் போதகரின் மனைவியும் பிள்ளைகளும் இலங்கை வந்தடைந்ததாக விமான நிலைய வட்டாரத்தினர் தெரிவித்தனர். போதகர் ஜெரோமின் மனைவி மற்றும் பிள்ளைகள் உட்பட 12 பேர் கொண்ட…

Read More