சிங்கப்பூர் ஓபனில் பி.வி.சிந்து தோல்வி

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றுடன் வெளியேறினார். சிங்கப்பூரில் நேற்று தொடங்கிய இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 13-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, முதல் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியுடன் மோதினார். இதில் சிந்து 21-18, 19-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 21-19 என்ற நேர் செட்டில் தாய்லாந்தின் வாங்சரோனை வீழ்த்தி…

Read More

ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: கூர்ந்து கவனிக்கும் அமெரிக்கா

அமெரிக்காவின் சான் ப்ரான்சிஸ்கோவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் அமெரிக்கர்கள் நிறைய பேர் இருக்கலாம் எனக் கருதப்படுவதால் இது தொடர்பாக உற்று நோக்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. AI-173 என்ற ஏர் இந்தியா விமானம் 216 பயணிகள் மற்றும் 16 விமான சிப்பந்திகளுடன் டெல்லியிலிருந்து அமெரிக்காவின் சான் ப்ரான்சிஸ்கோவிற்குப் புறப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை இன்ஜின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் ரஷ்யாவின் மகாடன்…

Read More

உக்ரைன் அணை தகர்ப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் தவிப்பு: ஐ.நா. கண்டனம்

 உக்ரைனின் அணை தகர்ப்பு ஆயிரக்கணக்கான மக்களை மோசமான விளைவுகளை நோக்கி தள்ளி இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையின் ஒரு பகுதியை, ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறுவதால் உக்ரைனில் உள்ள 10 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உக்ரைனின் கெர்சன் பகுதியில் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே, கடந்த 1956-ம் ஆண்டு…

Read More

பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக ஹர்ஷ டி சில்வா

பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் முன்மொழியப்பட்டிருந்தது.

Read More

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் – அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் உறுதி

இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார ரீதியான சவால்களை முறியடிப்பதற்கும், கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குமென அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத் உறுதியளித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 5 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்திருந்த அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத், நேற்று செவ்வாய்க்கிழமை (6) வரை நாட்டில் தங்கியிருந்தார். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும்…

Read More

கஜேந்திரகுமாரை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்ற அவருக்கு அனுமதி – சபாநாயகர்

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அவருக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படும் என சபாநாயகர் மகிந்த யாப்ப அபயவர்த்தன தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் எனக்கு அறிவித்துள்ளனர் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். பொலிஸார் தங்கள் கடமைகளை செய்வதை தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Read More

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பாராளுமன்ற சிறப்புரிமையை பாதுகாக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

பாராளுமன்ற அமர்வில் பங்கேற்கவிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்து அவரின் சிறப்புரிமையை  பொலிஸார்  மீறியுள்ளனர்.  பாராளுமன்ற அமர்வில் பங்கேற்கவுள்ள எம்.பி. ஒருவரை பொலிஸார் கைது செய்ய முடியாது என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகருக்கு சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (07) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை  முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,  பாராளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.க்கு பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள உரிமை இருக்கிறது. பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்…

Read More

ராஜாங்கனை சத்தா ரதன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை  பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்

Read More

தனிப்பட்ட தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ள வேண்டாம் – பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை

சமூக ஊடகங்கள் மூலம்  பண மோசடி சம்பவங்கள் தொடர்பில் அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் தனது தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்க வேண்டாம். அவ்வாறு வழங்கும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு  பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (5) கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நபர் ஒருவர் தனது தனிப்பட்ட தகவல்களை…

Read More

60 அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

நாட்டில் அத்தியாவசிய மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற 60 வகையான மருந்துகளின் விலைகளை, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 16 சதவீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். செவ்வாய்கிழமை (06) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மருந்துகளின் விலைகள் 16 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளன. வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அதிகரிக்கப்பட்ட 60 வகையான மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும். ஏனைய மருந்துகளின்…

Read More