கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு ஒரு சட்டம் அலி சப்ரி ரஹீமுக்கும் மற்றொரு சட்டமா? – எதிர்க்கட்சி கேள்வி
தவறிழைப்பவர்கள் எவராயினும் அவர்களுக்கெதிராக பக்கசார்பின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த அரசாங்கத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஆளுந்தரப்பு எம்.பி.யான அலி சப்ரி ரஹீமுக்கும் ஒருதலை பட்சமாகவும் , கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பாதகமாகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் குறிப்பிட்டார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வார்த்தைப் பிரயோகம்…

