தாய் வீட்டுக்கு சென்ற பெண் மீது துப்பாக்கிச்சூடு

மெதிரிகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டில் மிரிசேன மீனவ கிராமத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண், தாய் வீட்டுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது, ​​அவரது தாய் வீட்டின் முன் மறைந்திருந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெண் மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். பிரிந்து சென்ற கணவருடன் ஏற்பட்ட தகராறு…

Read More

ஒருபோதும் கருத்துரிமையை பறிக்கமாட்டேன்

வலயத்தின் எந்தவொரு நாட்டிலும் இடம்பெறாதவாறு குற்றவியல் அவதூறு சட்டத்தினை நீக்கிய தான் ஒருபோதும் கருத்துரிமையை பறிக்கும் வகையில் செயற்படப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். உத்தேச ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமானது இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக எவருக்கேனும் நெருக்கடிகள் ஏற்படும் பட்சத்தில், அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க வழி ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார். உலகின் அனைத்து நாடுகளும் இலத்திரனியல் ஊடக பாவனையின் போது இவ்வாறான செயன்முறைகளை பின்பற்றுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இலங்கையில் அந்தச் செயற்பாடுகளை…

Read More

கடமை தவறிய பொலிஸ் அதிகாாி பணி நீக்கம்

2019 ஆம் ஆண்டு உயிா்த் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு பிாிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த அதிகாரிக்கு எதிராக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, ஒழுக்காற்று மீறல்கள் தொடர்பாக 12 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிம் அனுப்பப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரி தனது குற்றத்தை…

Read More

கிரீஸ் அருகே கப்பல் கவிழ்ந்ததில் உயிரிழப்பு 79 ஆக உயர்வு

லிபியாவில் இருந்து இத்தாலிக்கு நூற்றுக்கணக்கான அகதிகளுடன் சென்ற மீன்பிடி கப்பல் கிரீஸ் அருகே நடுக்கடலில் பழுதாகி கவிழந்தது. இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. 104 பேரை் கிரீஸ் நாட்டின் கடற்படை, கடலோர காவல்படை மீட்டன. லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு கடாபி ஆட்சி கவிழ்ந்ததில் இருந்தே, அங்கு குழப்பமான சூழல் நிலவுகிறது. அங்கிருக்கும் மக்கள் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைவது தொடர்கிறது. இவர்களை படகுகளில் சட்டவிரோதமாக அழைத்துச் செல்வதை…

Read More

அமைதி படையினருக்கு நினைவுச் சுவர்: இந்தியாவின் தீர்மானத்துக்கு ஐ.நா. ஒப்புதல்

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருசிரா காம் போஜ், ஐ.நா. பொதுச் சபை அரங்கில் புதன்கிழமை “ஐ.நா. அமைதிப் படையில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நினைவு சுவர்” என்ற தலைப்பில் வரைவு தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். அதில், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலை மையகத்தில் பொருத்தமான மற்றும் முக்கியமான இடத்தில், ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றி உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கும் விதத்தில் அவர்களின் பெயர் பொதித்த நினைவுச் சுவரை எழுப்ப வேண்டும் என…

Read More

ஜூன் 23-ல் சுந்தர்.சியின் ‘தலைநகரம் 2’ ரிலீஸ்

சுந்தர்.சி நடித்துள்ள ‘தலைநகரம் 2’ படம் வரும் ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி நாயகனாக அறிமுகமான படம் ‘தலைநகரம்’. சுராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் வடிவேலு, ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் சுந்தர்.சியுடன் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வடிவேலுவின் ‘நாய் சேகர்’ கெட்டப் மற்றும் காமெடி பெரும் பிரபலமானது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘தலைநகரம் 2’…

Read More

”திருமணமான 3ம் நாளில் இருந்து கேட்க தொடங்கியது” – 11 வருடங்களுக்கு பின் தந்தையான மகிழ்ச்சியில் ராம் சரண்

தெலுங்கு நடிகர் ராம் சரண் தந்தை ஆக போகிறார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண். இவரும் தந்தையை போலவே தெலுங்கு சினிமா உலகில் கோலோச்சி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் வரை சென்றது. இதையடுத்து ராம் சரண் புகழ் அதிகரித்துள்ளது. ஹாலிவுட்டில் அவர் ஒருபடம் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சந்தோஷத்துக்கு மத்தியில் தந்தை ஆகும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார் ராம் சரண். அப்போலோ மருத்துவ குழுமத்தின் தலைவர்…

Read More

நேஷனல் லீக் கால்பந்து தொடர்: இறுதிப் போட்டியில் நுழைந்தது குரோஷியா

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நெதர்லாந்து அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குரோஷியா அணி. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரை இறுதி ஆட்டம் ரோட்டர்டாம் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் குரோஷியா – நெதர்லாந்து அணிகள் மோதின. 34-வது நிமிடத்தில் டோனியேல் மாலன் அடித்த கோலால் நெதர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது….

Read More

இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன்: கால் இறுதி சுற்றில் நுழைந்தார் ஸ்ரீகாந்த்

இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி காந்த் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் மகளிர் பிரிவில் பி.வி.சிந்து 2-வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி காந்த், சகநாட்டைச் சேர்ந்த லக்‌ஷயா செனுடன் மோதினார். 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தனது அனுபவத்தால் காந்த் 21-17, 22-20…

Read More

தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்துக்கு தடையுத்தரவு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் இன்று வியாழக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இவ்வாறு தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வெலிக்கடை பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஸ்ரீ ஜயவர்தனபுர வீதி, கோட்டா வீதி மற்றும் சரண வீதி ஊடாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்தல்…

Read More