இன அழிப்புக்கு உள்ளானவர்களின் ஆத்மா நிம்மதியாக வாழ விடாது – சிறிதரன்

இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழர்கள் மீது இனப்படுகொலை கட்டவிழ்க்கப்படவில்லை,இரசாயன குண்டு தாக்குதல் நடத்தப்படவில்லை என்றால் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு தாராளமாக முகம் கொடுக்கலாம். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என சிங்கள பெரும்பான்மை அரசாங்கம் மார்புத்தட்டிக் கொள்கிறது. கடந்த 14 ஆண்டுகளில் நிம்மதியாக வாழ்கின்றீர்களா. இன அழிப்புக்கு உள்ளான எமது உறவுகளின் ஆத்மா நிம்மதியாக இருக்க இடமளிக்காது. சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ள கூடிய நீதியான தீர்வினை வழங்க  அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்…

Read More

PUCSL தலைவரை பதவி நீக்குவது தொடர்பான பிரேரணை மீதான விவாதம் இன்று

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று(24) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் 2021 மார்ச் 14 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக ஜனக்க ரத்நாயக்க நியமிக்கப்பட்டார். எனினும், கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியுடன் உருவாகிய மின்சார நெருக்கடிக்கான மாற்றுத்தீர்வுகளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்வைத்த போதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த வருடம் ஆகஸ்ட் மற்றும் ஜனவரி…

Read More

வைத்தியரை கொலை செய்த யாசகர்

தலாஹேன பிரதேசத்தில் 54 வயதுடைய வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸ் நிலையத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லப்பல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் யாசகராக இருந்து வந்த நிலையில், உயிரிழந்தவரிடம் பணம் கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தலவத்துகொட பிரதேசத்தில் வைத்தியரை…

Read More

பேருந்தில், மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்ததுடன், அதில் பயணித்த சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில்…

Read More

காதலியைக் கரம் பிடிக்கும் அமேசான் நிறுவனர் 

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (59) தனது காதலியான லாரன் சான்செஸ் (51) என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெக்கென்சி ஸ்காட் என்பவரை ஜெஃப் பெசோஸ் முதலில் திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே, லாரன் சான்செஸ் என்ற பெண்ணை ஜெஃப் பெசோஸ் 2018-ஆம் ஆண்டுமுதல் காதலித்து வந்துள்ளார். பத்திரிகையாளரான லாரன் சான்செஸ் உடனான காதலை, ஜெஃப் 2019-ஆம் அண்டு வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து முதல் மனைவியுடன் விவகாரத்து நடந்தது. இந்த இணையருக்கு…

Read More

அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா? – ஜூனில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தொடக்கம்

‘கிரீடம்’, ‘மங்காத்தா’, ’என்னை அறிந்தால்’ படங்களைத் தொடர்ந்து ’விடாமுயற்சி’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் இந்தாண்டு தொடக்கத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் விக்னேஷ் சிவன், அந்தப் படத்திலிருந்து விலக்கப்பட்டார். இதையடுத்து, அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்தது….

Read More

“இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது” – ‘தங்கலான்’ -பா.ரஞ்சித்

“இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. உலக அளவில் ரசிகர்கள் ரசிக்கும் நல்ல சினிமாவாக இது இருக்கும்” என ‘தங்கலான்’ படம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “தங்கலான் 1990 காலக்கட்டத்தில் நடக்கும் கதை. கேஜிஎஃப் உருவாவதற்கு முன்பு அந்த கேஜிஎஃப் நிலத்தில் இருந்த தங்கத்தை தோண்டி எடுத்த மக்களைப் பற்றிய கதை. அந்த மக்களின் கலாசாரத்தையொட்டி படத்தை உருவாக்கியிருக்கிறேன். அது திரையில் பிரதிபலிக்கும். இந்தப்…

Read More

வில்வித்தையில் கவனம் ஈர்த்துள்ள பிரதமேஷ் ஜாவ்கர்

சீனாவின் ஷாங்காய் நகரில் சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை வில்வித்தை தொடரின் ஆண்கள் தனிநபர் காம்பவுண்ட் பிரிவு இறுதிப் போட்டியில், 2 முறை உலக சாம்பியனும் நம்பர் 1 வீரருமான நெதர்லாந்தின் மைக் ஷ்லோசரை வீழ்த்தி அனைவரது பார்வையையும் ஈர்த்துள்ளார் இந்தியாவின் பிரதமேஷ் ஜாவ்கர். 19 வயதான பிரதமேஷ், மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா பகுதியைச் சேர்ந்தவர். தான் பங்கேற்ற முதல் தொடரிலேயே அதுவும் உலகக் கோப்பையில் தங்கம் வென்றுள்ள பிரதமேஷ் ஜாவ்கருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன….

Read More

பிரதமர் மோடி தான் Boss அவுஸ்திரேலிய பிரதமர் புகழாரம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தான் பொஸ் என அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் பயணம் மேற்கொண்டு நேற்று அவுஸ்திரேலியா சென்றடைந்தார்.  சிட்னி நகரிலுள்ள குடோஸ் பேங்க் அரீனா எனும்  அரங்கில்  இன்று நடைபெற்ற, பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த இந்திய மக்கள் பங்குபற்றிய நிகழ்ச்சியொன்றில் பிரதமர் மோடியும் அவுஸ்திரேலிய பிரதமர்  அந்தோனி அல்பானீஸும் கலந்துகொண்டனர்.  இந்நிகழ்வில் பேசிய அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், ‘நான் இறுதியாக இந்த மேடையில் பிரபல…

Read More

அலி சப்ரி ரஹீம் கடத்திய தங்கம் அரசுடமையாக்கப்பட்டது

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் சட்ட விரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட தங்கம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.  3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 91 கையடக்க தொலைபேசிகளே இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.  குறித்த தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளின் மொத்த பெறுமதி எட்டரை கோடி ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.  அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு 75 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக…

Read More