வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பில் 31 க்கு முன்னர் ஆலோசனைப் பெறுங்கள் – பெப்ரல் அமைப்பு
வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பில் இது வரையில் கிராம உத்தியோகத்தரிடமிருந்து எவ்வித அறிவித்தலும் கிடைக்கப் பெறாதவர்கள் 31ஆம் திகதிக்கு முன்னர் கிராம அலுவலரை அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்தை நாடி உரிய ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பெப்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மக்களின் இறையாண்மையின் ஒரு அங்கமான வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்கு வாக்காளர்களாக அனைவரும் தம்மை பதிவு செய்வது கட்டாயத் தேவையாகும். வாக்காளர் பட்டியலில்…

