கிழக்கு மாகாணத்தில் விரைவில் விமான சேவை
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் பல கடல் விமானங்கள் இறங்கும் தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டு வந்ததையடுத்து விமான சேவைகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்வதாக…

