பௌத்தமதத்தை அவமதித்த குற்றச்சாட்டு – நதாசாவிற்கு 7 ம் திகதி வரை விளக்கமறியல்
பௌத்தமதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நகைச்சுவை கலைஞர் நதாசா எதிரிசூரியவை ஜூன் ஏழாம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பௌத்த மதத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட நகைச்சுவை கலைஞர் நதாசா எதிரிசூரிய கொழும்பு விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.இலங்கையிலிருந்து வெளியேற முயன்றவேளை இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தனது நிகழ்ச்சியின் போது பௌத்தமதம் பௌத்ததத்துவம் கிறிஸ்தவ மதம் ஆகியவற்றை அவமதித்தார் என முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

