பாடசாலை மாணவர்கள் பங்கேற்ற நிகழ்வொன்றில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி

அமெரிக்காவின் மிசிசிபி மாகாணம் பெ செயிண்ட் லுயிஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு இடம்பெற்ற கேளிக்கை நிகழ்வொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாப்பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந் நிகழ்வில் 15க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நிகழ்வில் பங்கேற்ற 19 வயது இளைஞன் ஒருவனாலேயே இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 18 வயது இளைனும் , 16 வயது சிறுவனொருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பொலிஸார்…

Read More

சூடான் உள்நாட்டு போரில் பலியானோர் எண்ணிக்கை 528 ஆக உயர்வு

ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவ ஆட்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு இராணுவத்தின் ஒரு பிரிவான துணை இராணுவம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் இடம்பெற்றது. இந்நிலையில் கடந்த மாதம் 15ஆம் திகதி தலைநகர் கார்டூமில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையம் போன்றவற்றை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக துணை இராணுவம் அறிவித்தது. இதனையடுத்து இந்த மோதல் உள்நாட்டு போராக உருவெடுத்தது. இந்த உள்நாட்டு போர் காரணமாக…

Read More

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பாதிப்பையும் ஏற்படுத்த இடமளியேன்! மே தின செய்தியில் ஜனாதிபதி உறுதி

நாட்டில் உழைக்கும் மக்களின் பெருமையை உலகுக்குக் காட்டக் கூடிய ஒரு சந்தர்ப்பம் இதுவாகும்.  இந்த இக்கட்டான நேரத்தில் குறுகிய அரசியல் நலன்களுக்கு இரையாகாமல் நாட்டை முதன்மைப்படுத்தி செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார். ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சித்தாலும் உழைக்கும் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட செய்தியில்…

Read More

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த சடலம்

தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதனை அவதானித்த பிரதேசவாசிகள், தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சடலம் மீதான விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

இலங்கையை மேற்கோள் காட்டிய இம்ரான் கான்

நாட்டில் ஆட்சியிலுள்ளவர்கள் உரிய காலத்தில் உரிய முறையில் தேர்தலை நடத்தாவிட்டால் இலங்கையில் எழுந்துள்ள நிலையை போன்றே தமது நாட்டிலும் உருவாகும் என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.  தமது நாட்டில் உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படும் என்ற பாரியதொரு நம்பிக்கையில் இருப்பதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். மக்களின் வாக்குரிமையை தடுத்தால் அவர்கள் வீதிக்கு இறங்கி வன்முறையில் ஈடுபடும் போது அவர்களுடைய பலத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என அவர் மேலும்…

Read More

மீண்டும் தெலுங்கில் நடிக்கும் ஆண்ட்ரியா

திரையுலகில் நடிகையாகவும், பின்னணி பாடகியாகவும் இருப்பவர் ஆண்ட்ரியா. பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள அவர், தற்போது தமிழில் ‘பிசாசு 2’, ‘கா’, ‘மாளிகை’, ‘நோ என்ட்ரி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2013ல் தெலுங்கில் ரிலீசான ‘தடக்தா’ என்ற படத்தில் நடித்தார். அவருடன் நாகசைதன்யா, தமன்னா, சுனில் நடித்தனர். ஆண்ட்ரியா தெலுங்கில் நடித்த ஒரே படம் இது. இந்நிலையில், 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவர் தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.வெங்கடேஷ் நடிப்பில் உருவாகும்…

Read More

இன்று மே தினம்

சர்வதேச தொழிலாளர் தினமான மே தினம் இன்று திங்கட்கிழமை (மே1) கொண்டாடப்படவுள்ளது. கடந்த 2020 , 2021ஆம் ஆண்டுகளில் கொவிட் தொற்று , 2022இல் பொருளாதார நெருக்கடிகளால் மேலெழுந்த ஆர்ப்பாட்டங்கள் என்பவற்றால் மே தினக் கூட்டங்கள் சம்பிரதாய பூர்வமாக நடத்தப்படவில்லை. எனினும் இம்முறை இந்த நெருக்கடிகளிலிருந்து நாடு ஓரளவிற்கு மீண்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பிரதான கட்சிகள் அவற்றின் மே தினக் கூட்டங்களை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிலையில் கட்சிசார்பின்மையை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி…

Read More

ஐஎஸ் அமைப்பின் தலைவர் படுகொலை

சிரியாவில் செயற்படும்   ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு ஹ_சைன் அல் குரேசி  கொல்லப்பட்டுள்ளார். துருக்கியின்  எம்ஐடி புலனாய்வு பிரிவின் தாக்குதலின் போது இவர் கொல்லப்பட்டுள்ளார் என துருக்கி ஜனாதிபதி அறிவித்துள்ளார். கொல்லப்பட்ட நபரை துருக்கியின் புலனாய்வு பிரிவினர் நீண்டகாலமாக கண்காணித்துவந்தனர் என துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளிற்கு எதிரான எங்கள் நடவடிக்கைகளை எந்தவித பராபட்சமும் இன்றி முன்னெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார். துருக்கி எல்லைக்கு அருகே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக சிரிய அதிகாரிகள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளனர். பெப்ரவரியில் அமெரிக்காவின்…

Read More

பிளே ஸ்டோரில் 3,500+ கடன் செயலிகளை நீக்கிய கூகுள்

கடந்த ஆண்டு இந்தியாவில் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட கடன் செயலிகளை (லோன் ஆப்) பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது கூகுள். இந்த செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் விதிகளை மீறிய காரணத்திற்காக நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ல் நிதி சேவை சார்ந்த செயலிகளுக்கான கொள்கைகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அவ்வப்போது இந்த கொள்கைகளை அப்டேட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது கூகுள். மொபைல் போன் செயலி மூலம் பயனர்களுக்கு கடன் வழங்கும் செயலிகள் கடந்த 2021 முதல் ரிசர்வ் வங்கியிடம்…

Read More

திரையில் வெளியானது ‘SISU’: நாஜி படையை எதிர்த்து நிற்கும் தனி ஒருவன்

 நாஜி படையை எதிர்த்து நிற்கும் தனி ஒருவனின் கதையை விவரிக்கும் ‘SISU’ திரைப்படம் வெள்ளித்திரையில் உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிட்டுள்ளது. ஜல்மாரி ஹெலண்டர் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். 1944-ல் வடக்கு ஃபின்லாந்தில் இந்த கதை நடப்பது போல காட்சி படுத்தப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த சிப்பாயான ஆடோமி கோர்பி (ஜோர்மா டோமிலா) என்பவரை மையமாக வைத்து கதை நகர்கிறது. முதன்முறையாக ‘டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில்’ திரையிடப்பட்டது. பின்னர் கடந்த…

Read More