உக்ரைன் போரில் 5 மாதங்களில் 20,000+ ரஷ்ய இராணுவ வீரர்கள் உயிரிழப்பு: அமெரிக்கா தகவல்

உக்ரைன் போரில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கெர்பி கூறும்போது, “உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு இராணுவம் சார்ந்து பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதத்தில் மட்டும் உக்ரைன் போரில் 20,000-க்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்துள்ள இராணுவ வீரர்களில் பெரும்பாலானவர்கள் பெஞ்னர் என்ற தனியார் இராணுவ கம்பெனியைச்…

Read More

உலக வளர்ச்சியில் இந்தியா, சீனாவின் பங்கு 50% இருக்கும்: ஐஎம்எப்

 நடப்பு ஆண்டின் உலக பொருளாதார வளர்ச்சியில் 50% பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் மட்டுமே வழங்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து ‘பிராந்திய பொருளாதார கண்ணோட்டம்-ஆசியா மற்றும் பசிபிக்’ தொடர்பான ஐஎம்எப் அறிக்கை: 2022-ம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி விகிதம் 3.8% ஆக இருந்தது. இது நடப்பாண்டில் 4.6% ஆக அதிகரிக்கும். இந்த வளர்ச்சி பெரும்பாலும், இந்தியா மற்றும் சீனாவால் ஏற்படும். சர்வதேச வளர்ச்சியில் இப்பிராந்தியத்தின் பங்கு 70% ஆக இருக்கும். ஆசிய…

Read More

தலிபான்கள் உடனான சந்திப்பை தவிர்க்க மாட்டேன் – ஐ.நா. பொதுச் செயலாளர்

 “தலிபான்களைச் சந்திப்பதை நான் தவிர்க்க போவதில்லை. ஆனால், அதற்கு சரியான நேரம் தற்போது இல்லை” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் பற்றிய முக்கிய பிரச்சினைகளை விவாதிப்பதற்காக தோகாவில் ஆப்கானிஸ்தான் தூதர்கள் நடத்திய கூட்டத்தில் ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் கலந்து கொண்டார். தலிபான்களுடன் எவ்வாறு பணியாற்றுவது என சர்வதேச சமூகத்திற்கு ஒரு பொதுவான புரிதலை ஏற்படுத்துவதற்காக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் அண்டோனியாவிடம்…

Read More

மனோபாலா காலமானார் – தமிழ்த் திரையுலகினர் புகழஞ்சலி

“எல்லோரிடமும் சகஜமாக பழகக் கூடியவர்”, “எல்லாருக்காகவும் முன் நின்றவர்”, “அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்படாதவர்” என்று மனோபாலாவுக்கு தமிழ்த் திரையுலகினர் புகழாரம் சூட்டியுள்ளனர். தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமான மனோபாலா சென்னையில் இன்று (மே 3) காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பிரச்சினையால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த்: “பிரபல இயக்குநரும், நடிகருமான,…

Read More

3 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று(02) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சபரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், மன்னார், நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(02) 75 மில்லிமீட்டர் வரையான மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மழை காரணமாக பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளது….

Read More

கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கருகில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் காயம்

கொழும்பு துறைமுகத்தின் ஆறாவது நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 09 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வீதி அபிவிருத்தி தளத்தில் பணிபுரியும் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துறைமுகத்துடன் தொடர்புடைய வீதி அபிவிருத்தி தளத்திலிருந்து இரும்பு திருடச் சென்ற இருவரை விசாரனை செய்ய முற்பட்ட போது, அங்கு வந்த பிரதேச மக்களால் அமைதியின்மையின்மை ஏற்பட்டுள்ளது.  இதன்போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ப்ளூமெண்டல் பகுதியை சேர்ந்தவர்களே…

Read More

முன்னோக்கிப் பயணிக்க இனப்பிரச்சினைக்கான தீர்வு அவசியம் !பாராளுமன்றமே அரசாங்கம் என்ற பொறிமுறைக்குள் செயற்பட வாருங்கள் – தமிழ் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடு என்ற ரீதியில் முன்னோக்கிப்பயணிப்பதற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அத்தியாவசியமானதாகும். பாராளுமன்றமே அரசாங்கம் என்ற பொறிமுறைக்குள் செயற்படாது தூரம் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்பதை தமிழ் கட்சிகளிடம் தெரிவிக்க விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு கொழும்பு – சுகததாச உள்ளக அரங்கில் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம் இடம்பெற்றது. கட்சி சார்பின்iமையை பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

Read More

செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஜனாதிபதி செயலணி

நாட்டில் செயற்கை நுண்ணறிவு பாவனையை ஊக்குவிப்பதற்காக துறைசார் நிபுணர்கள் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்றை பெயரிட்டு அவர்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறும், அது தொடர்பான கோட்பாட்டு ஆவணமொன்றை தயாரிக்குமாறும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார். விவசாயம், கல்வி, சுகாதாரம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட பல துறைகளில் மேலும்…

Read More

டுவிட்டரில் செய்திகளைப் படிக்க அடுத்த மாதம் முதல் கட்டணம்..!!

செய்தி நிறுவனங்கள் டுவிட்டரில் தங்கள் செய்திக் கட்டுரைகளைப் படிக்க பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் வசதி அடுத்த மாதம் முதல் அறிமுகம் செய்யப்படும் என எலன் மாஸ்க் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் , ‘அடுத்த மாதம் முதல் டுவிட்டர் தளம் செய்தி நிறுவனங்கள் ஒவ்வொரு கட்டுரைக்கும் பயனர்களிடம் ஒரே கிளிக்கில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும். மாதாந்த கட்டணத்துக்கு பதிவு செய்யாத பயனர்கள் அவ்வப்போது கட்டுரையைப் படிக்க விரும்பும்போது அந்த ஒரு கட்டுரைக்கு அதிக…

Read More

டுவிட்டர் நிறுவனத்தில் மகப்பேறு கால விடுமுறையை குறைத்த எலன் மாஸ்க்!

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரரான எலன் மாஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்த அவர் , ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார். இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தில் மேலும் ஒரு மாற்றமாக குழந்தை பிறந்த பிறகு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பெற்றோர் விடுப்பு 20 வாரங்களாக இருந்தது. அதை 2 வாரங்களாக எலன் மாஸ்க் குறைத்துள்ளார். அதாவது 140 நாட்களில் இருந்து வெறும் 14 நாட்களாக விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது….

Read More