ஊடகவியலாளர்கள் படுகொலை 50 வீதத்தினால் அதிகரித்துள்ளது – ஐ.நா

உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஊடகங்கள் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் அனைத்து நாடுகளும் உண்மையை இலக்குவைப்பதையும் அதனை செய்தியாக தெரிவிப்பவர்களையும் இலக்குவைப்பதை நிறுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2022இல் ஊடகவியலாளர் படுகொலை 50 வீதத்தினால் அதிகரித்துள்ளது என்பது நம்பமுடியாத விடயம் என தெரிவித்துள்ள  அன்டோனியோ குட்டரஸ் பத்திரிகை சுதந்திரம் என்பதே ஜனநாயகம் நீதியின் அடிப்படை எனவும் குறிப்பிட்டுள்ளார். 2022 இல் 67 ஊடகபணியாளர்கள் கொல்லப்பட்டனர். உண்மைக்கும் புனைகதைக்கும், அறிவியலுக்கும் சதிக்கும் இடையே…

Read More

அமெரிக்காவில் வீடொன்றில் ஏழு உடல்கள் மீட்பு

அமெரிக்காவில் காணாமல்போன பதின்மவயதினரை தேடிச்சென்ற பொலிஸார் காணியொன்றிற்குள் 7 சடலங்களை கண்டுபிடித்துள்ளனர்.சடலமாக மீட்கப்பட்டவர்களில் தாங்கள் தேடிவந்த இவி வெப்ஸ்டர் 14 பிரிட்டனி பிரூவர் ஆகியோரின் உடல்களும் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பதின்ம வயது சிறுமிகளுடன் பயணித்த பாலியல் குற்றவாளி ஜெசே மக்படனின் சடலத்தையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மரணத்திற்கான காரணம் என்னவென பொலிஸார் தெரிவிக்கவில்லை.ஏனைய நான்கு உடல்கள் குறித்து அதிகாரிகள் தகவல்கள் எவற்றையும் வெளியிடவில்லை.திங்கட்கிழமை பதின்மவயது சிறுமிகள் இருவரும் காணாமல்போயுள்ளதாக ஒக்லஹோமாவின் பொலிஸார் அறிவித்திருந்தனர்.இருவரும் பாலியல் குற்றவாளி மக்டொவனுடன்…

Read More

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார் இந்திய விமானப்படை தளபதி

இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌதாரி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனை சந்தித்தார். இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் திங்கட்கிழமை (மே 02) இடம்பெற்றது.  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த இந்திய விமானப்படைத் தளபதி இராஜாங்க அமைச்சரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்குமிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தியா, இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் உதவிக்கு நன்றி தெரிவித்த இராஜாங்க அமைச்சர், பரஸ்பர நன்மை மற்றும்…

Read More

தடை விவகாரம் – வசந்த கரணாகொட அமெரிக்க தூதுவருக்கு கடுமையான கடிதம்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கு கடுமையான கடிதமொன்றை எழுதியுள்ள இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி அமெரிக்க தூதுவர் தனதும் தனது குடும்பத்தினதும் உரிமைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.45 வருட குற்றமற்ற அரசசேவையின் மூலம் நான் ஏற்படுத்திக்கொண்ட கௌரவத்;திற்கு நீங்கள் சுமத்தியுள்ள தவறான குற்றச்சாட்டுகள் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என தனது கடிதத்தில் தெரிவித்துள்ள வசந்தகாரணகொட ஐசிசிஆர்பியின் 17 வது பிரிவின் கீழ் உங்கள் நடவடிக்கைகள் எனது உரிமை மீது நேரடியாக தலையிடுகின்றன எனவும் அமெரிக்க…

Read More

டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் என்பன ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக சுகாதார தரப்பு எச்சரித்துள்ளது. எனவே இரண்டு நாட்களுக்கும் அதிகமாக காய்ச்சல் நிலைமை காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுமாறு கொழும்பு மாநகரசபையின் பிரதான மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி வரை 28 918 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது பாரிய அதிகரிப்பாகும். டெங்கு…

Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஏற்பாடு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் மே 18ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் குறித் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பேரினவாத மேலாதிக்கத்தின் தமிழினவழிப்புச் சிந்தனையின் கொடிய கோரப்பற்கள் முள்ளிவாய்க்கால் மண்ணின் பிடியில் அடைக்கலம் அடைந்த ஈழத்த்தமிழினத்தின் இதயத்தில் ஆழப்பதிந்த நாட்கள் கடந்துபோய் 14 ஆண்டுகள் நிறைவடையும் நாள் மே 18. மனிதாபிமானத்தையும் மனித…

Read More

இந்திய நிதியமைச்சரை சந்தித்த அலி சப்ரி

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொரியாவின் சியோலில் இன்று (03) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56 வது ஆண்டு கூட்டத்தின் ஒரு பகுதியாக இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கான பொருளாதார கூட்டாண்மை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

Read More

தேர்தல் மனுவை பரிசீலிக்க திகதி குறிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 9-ம் திகதி பரிசீலிக்க நீதிபதிகள் இதன்போது உத்தரவிட்டனர். மார்ச் மாதம்…

Read More

நிதி ஆணைக்குழுவிற்கு 3 புதிய உறுப்பினர்கள்

அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய நிதி ஆணைக்குழுவிற்கு மூன்று புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய உறுப்பினர்களாக சுமித் அபேசிங்க (தலைவர்), துவான் நலின் ஓசேன் மற்றும் மாயன் வாமதேவன் ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read More

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வருடாந்திர தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது இந்திய அணி. வருடாந்திர தரவரிசை மதிப்பீட்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. இந்தியா 119 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தது. ஆண்டு தர நிர்ணய மதிப்பீடுகளின்படி மே 2020 முதல் மே 2022 வரை நடைபெற்ற போட்டிகளுக்கு 50 சதவிகித புள்ளிகளும், அதற்கு பிறகான போட்டிகளுக்கு 100 சதவிகித புள்ளிகளும் வழங்கப்படும். இதனால் 2019-2020ல் பாகிஸ்தானுக்கு…

Read More