நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்: சர்வதேச நாணய நிதியம்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.  தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தொடரின் போது, ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட  சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்கள பணிப்பாளர், கிருஷ்ணா ஶ்ரீநிவாசன் இது தொடர்பில் தெளிவுபடுத்தினார். இலங்கையில் அதிகரித்திருந்த பணவீக்கம் தற்போது குறைவடைந்துள்ள போதும், நிதிக் கொள்கைகள் ஊடாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கிருஷ்ணா ஶ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளார்.  கடனை…

Read More

எரிபொருள் விநியோகம் தொடர்பில் புதிய தீர்மானம்! அமைச்சர் காஞ்சன விஜேசேகர தகவல்

450 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டு புதிய வௌிநாட்டு எண்ணெய் விநியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஒரு மாதத்திற்குள் புதிய விநியோகத்தர்கள் இலங்கையில் வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் நேற்று (04) நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று முற்பகல் கொழும்பு மன்றக் கல்லூரியில் எரிபொருள் நிலைய உரிமையாளர்களை சந்தித்தார். புதிய விநியோகத்தர்களுக்கான சந்தைப்படுத்தல் பிரதிநிதிகளை…

Read More

மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட தீர்மானம்

கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் நேற்று முதல் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு  நேற்று பகல் கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக, சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் சாருதத் இலங்கசிங்க குறிப்பிட்டார். பல கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு மாதங்களுக்கு மேலாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஈரானில் இராணுவ தளவாட மையத்தில் வெடி விபத்து – இருவர் உடல் சிதறி பலி

ஈரானின் வடக்கு பகுதியில் உள்ள செம்மான் மாகாணம் டம்கான் நகரில் இராணுவ தளவாட மையம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த மையத்தில் வெடிகுண்டுகளை தரம் பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் போது சற்றும் எதிர்பாராதவிதமாக அங்கு பாரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் இரு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத. மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஈரான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

இஸ்ரேல் நகரங்கள் மீது ஹமாஸ் போராளிகளால் ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நீடித்து வருகிறது. இஸ்ரேல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அந்த நாட்டு சிறைகளில் அடைக்கப்படும் பாலஸ்தீனர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் இஸ்ரேல் பொலிஸாரால் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாலஸ்தீன போராளிகள் குழுவின் தலைவரான காதர் அட்னான் (வயது 45) கடந்த 3 மாதங்களாக சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்தார். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் சிறையில்…

Read More

செர்பியா பாடசாலையில் துப்பாக்கிச்சூடு ; 9 பேர் பலி

செர்பியாவின் தலைநகர் Belgrade-இல் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 8 சிறுவர்களும் காவலாளி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.  மேலும், 6 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  Belgrade-இல் உள்ள  Vladislav Ribnikar எனும் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயது மாணவர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த மாணவர் தனது தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.  செர்பியாவில் இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை இதுவே முதல் தடவை என…

Read More

உக்ரைனின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும்: ரஷ்யா எச்சரிக்கை

அதிபர் விளாடிமிர் புதின் வசிக்கும் மாளிகை மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், “எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும்” பதிலடி கொடுக்க தமக்கு உரிமை உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.  நேற்றிரவு மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையான கிரெம்லினை இலக்கு வைத்து பறந்த இரண்டு ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியுள்ளது.  அத்துடன்,  அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல அவை ஏவப்பட்டிருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.  ஒரு சிறிய வெடிப்புடன் கிரெம்லினில் ஏதோ…

Read More

கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  நாளையும்(05) நாளை மறுதினமும்(06) இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதற்கமைய, கைதிகளின் உறவினர்களின் மூலம் அவர்களின் வீடுகளில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவுப்பொதி மற்றும் இனிப்புப் பண்டங்களை ஒருவருக்கு போதுமான அளவில் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  சிறைச்சாலைகள் சட்டதிட்டங்களுக்கு அமைய உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உறவினர்களைப் பார்வையிடும் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இங்கிலாந்து சென்றார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(04) அதிகாலை இங்கிலாந்திற்கு பயணித்துள்ளார். பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி சென்றுள்ளார். ஜனாதிபதியுடன் மேலும் 8 பேர் நாட்டிலிருந்து பயணித்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டார். பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Read More

கணவருக்கு பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பு – முகமட் சமியின் மனைவி குற்றச்சாட்டு

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமட் சமி பல பாலியல்  தொழிலாளர்களுடன் தொடர்பிலிருந்தார் என அவரது மனைவி ஹாசின் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனது கணவரை அவர் பிளேபோய் என வர்ணித்துள்ளார். இந்திய அணியின் முன்னணி வீரராக திகழ்பவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. முகமது ஷமிக்கு ஹாசின் ஜஹான் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முகமது ஷமி மீது ஹாசின் ஜஹான்…

Read More