பிரித்தானிய பேரரசராக முடிசூடிய 3 ஆம் சார்ள்ஸ் மன்னர்

சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியமாக திகழ்ந்த பிரித்தானியாவின் புதிய பேரரசராக மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் நேற்று சனிக்கிழமை (06) முடிசூட்டப்பட்டார். கடந்த செப்டம்பரில்  இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையடுத்து இளவரசர் மூன்றாம் சார்ள்ஸ், மன்னர் அரியணைக்கு உரித்துடையவரானார். இதன் முடிசூட்டு விழா தலைநகர் லண்டனில் அமைந்துள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலயத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.  பிரித்தானியாவில் 70 ஆண்டுகள் கழித்து முடிசூட்டு விழாவொன்று நடத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.  பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயம் வரை அரங்கேறிய கண்கவர் வாகனப் பேரணியுடன்…

Read More

அப்புதளையில் எரிபொருள் கொள்கலன் ஊர்தி விபத்து

அப்புத்தளை பத்கொட பகுதியில், இன்று (06) அதிகாலை எரிபொருள் கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் அப்புத்தளை நோக்கிப் பயணித்த குறித்த எரிபொருள் கொள்கலன் ஊர்தி, வீதியை விட்டுவிலகிச் சென்று அருகில் உள்ள வீடொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, காயமடைந்த குறித்த கொள்கலன் ஊர்தியின் உதவியாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்தினால், குறித்த வீட்டுக்கு…

Read More

இந்தியாவின் நிதியுதவியில் விமானப்படை கல்லூரியில் நவீன கேட்போர் கூடம்

நீண்டகால இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் இந்திய விமானப்படையால் நன்கொடையாக சீனக் குடாவில் அமைந்துள்ள விமானப்படை கல்லூரியில் புதிய கேட்போர் கூடமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் இந்திய விமானப்படை பிரதானி எயா சீப் மார்ஷல் வீ ஆர் சௌத்ரியால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. அமைக்கப்படவுள்ள புதிய கேட்போர் கூட கட்டடத்துக்குள் 700 பேர் அமரக் கூடிய வசதி காணப்படும். 6 மாதங்களுக்குள் சகல நவீன வசதிகளுடன் இந்த கேட்போர் கூடம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. இலங்கை விமானப்படை…

Read More

இலங்கையின் அணிசேரா கொள்கையை மதிக்கின்றோம்- ரஷ்ய தூதுவர்

இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இலங்கை அரசாங்கம் தற்போது பின்பற்றுகின்ற அணிசேரா கொள்கையை நாம் மதிப்பதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் எஸ்.டகர்யான் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் நாட்டை மாத்திரமின்றி யுத்தத்துக்கு அனுசரணை வழங்கும் ஏனைய மேற்குலக நாடுகளையும் ரஷ்யா மீண்டும் தோல்வியடையச் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் உலக யுத்தத்தின் போது உயிர் நீத்த ரஷ்ய இராணுவத்தினரை நினைவு கூரும் வகையில் கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்தினால் தேசிய பொது நூலகத்துக்கருகில்…

Read More

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனையின் கீழ் மீன்சாரத்துறையில் மறுசீரமைப்பு

நாட்டின் மின்சாரத்துறையை மறுசீரமைத்தல் மற்றும் அதன் வினைத்திறனை மேம்படுத்தல் என்பவற்றுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர , ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனை சபையின் பணிப்பாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மின்சக்தி துறையை மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டங்களுக்குத் தேவையான தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள் , மின் உற்பத்தி நிறுவனங்களாக மேம்படுத்தும் போது…

Read More

‘டெங்கு 3 வைரஸ்’ நோயாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்!

பாடசாலை மாணவர்களில் 24 சதவீதமானோருக்கு மாத்திரமே டெங்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது – பேராசியர் சந்திம ஜீவந்தர நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றில் 24 சதவீதமானோருக்கு மாத்திரமே டெங்கு நோய் எதிர்ப்பு சக்தி காணப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாண்டு ‘டெங்கு 3 வைரஸ்’ பரவ ஆரம்பித்துள்ளமையானது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையை பாரியளவில் அதிகரிக்கச் செய்யக் கூடும் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூட நோய் எதிர்ப்பு…

Read More

மஹிந்த குடும்பத்தின் ஊழல்கள் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்

மஹிந்த ராஜபக்சவின் ஊழல்கள் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதுடன் ஊழல் பணம் அனைத்தும் மக்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.எம்.எப் பணம் கொடுப்பது சம்பந்தமாக சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளில் ஊழல்கள் விசாரிக்கப்பட வேண்டும் என…

Read More

யாழ்ப்பாண சிறைச்சாலையில் 14 ​கைதிகள் விடுதலை

வெசாக் தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு , ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் அடிப்படையிலையே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். சிறு குற்றங்கள் , தண்ட பணம் செலுத்த முடியாததால் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் உள்ளிட்டவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Read More

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணைந்துகொண்டுள்ளார். பொதுநலவாய செயலகத்தில் இந்த மாநாடு இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. 3ஆவது சாள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி, ஏனைய நாடுகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

யாதும் ஊரே யாவரும் கேளிர் ரிலீஸ் எப்போது?

அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இதில் விஜய் சேதுபதி நாயகனாகவும் அவர் ஜோடியாக மேகா ஆகாஷும் நடித்துள்ளனர். மோகன் ராஜா, மகிழ்திருமேனி, கனிகா, ரித்விகா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கிதுரை தயாரித்துள்ளார். இந்தப் படம் எப்போதோ முடிந்துவிட்டது. பல்வேறு காரணங்களால், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுத் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது இதன்…

Read More