பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு
களுத்துறை நகரில் ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து மாடிகளை கொண்ட தற்காலிக தங்குமிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் நிர்வாண சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (06) இரவு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை, நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் மாணவியின் பெற்றோரால் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி நேற்று மதியம்…

