மஹிந்த, பசில் இருவருக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணை

முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்க்ஷ, பசில் ராஜபக்க்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு திங்கட்கிழமை (08) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு…

Read More

நுவரெலியா இனி சுற்றுலா நகரம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிறப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பங்கேற்புடன் திங்கட்கிழமை (08) நடைபெற்ற கூட்டத்திலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கை…

Read More

பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். தற்காலிகமாக ‘எஸ்கே21’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் ‘எஸ்கே21’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதாக படக்குழு வெளியிட்ட வீடியோ ரசிகர்களை…

Read More

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம்

நடிகர் ரஜிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் லால்…

Read More

பாகிஸ்தானில் மதபோதகர் அடித்துக்கொலை

பாகிஸ்தானில் கைபர் பக்துவா மாகாணம் மர்டன் மாவட்டம் சவால்ட்ஹர் கிராமத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெரிக் இ இன்சப் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய இஸ்லாமிய மத போதகர் நிகர் ஆலம் என்பவர் மத நிந்தனையில் ஈடுபட்டு மத கடவுளை அவமதித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள் சிலர் நிகர் ஆலமை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதனையடுத்து நிகர் ஆலமை பொலிசார் காப்பாற்றி அருகில் இருந்த கடைக்குள் பூட்டி வைத்துள்ளனர். எனினும் அங்கிருந்த சிலர்…

Read More

பஸ் தரிப்பிடத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மோதிய கார் – 7 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிரவ்ன்ஸ்வெலி நகரத்தில் பேரூந்து தரிப்பிடமொன்றுக்கருகில் நின்றுகொண்டிருந்தவர்கள் காரொன்று மீது வேகமாக மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதோடு , மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய கார் சாரதியை கைது செய்து அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

இந்திய வான்பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் விமானம்

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு ‘போயிங் 777’ ரக விமானம்இ கடந்த 4ஆம் திகதி இரவு 8 மணியளவில், வளைகுடாவில் உள்ள மஸ்கட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்பி வந்து லாகூர் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியிருக்க வேண்டும். எனினும் விமான நிலையத்தை நெருங்கியபோது, கனமழை பெய்து கொண்டிருந்தமையால் தரையிறங்க முடியவில்லை. கனமழையாலும், குறைவான உயரத்தில் பறந்ததாலும் விமானி பாதையை தவற விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பதானா பொலிஸ் நிலையம்…

Read More

800 மீட்டர் ஓட்டப் போட்டியில் கயந்திக்கா அபேரத்ன முதலிடம்

இலங்கையின் கயந்திக்கா அபேரத்ன, மிச்சிதாக்கா ஞாபகார்த்த சர்வதேச மெய்வல்லுனர் விழாவில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். பத்தாவது மிச்சிதாக்கா ஞாபகார்த்த சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகள் ஜப்பானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நிறைவு பெற்றன. மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்போட்டியை 2 நிமிடங்கள் 4.26 செக்கென்களில் நிறைவு செய்த இலங்கையின் கயந்திக்கா அபேரத்ன முதலிடம் பெற்றார். கயந்திக்கா அபேரத்ன இந்தப் போட்டி பிரிவில் இலங்கை சாதனைக்கும் உரிமை கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலைத்தேய சங்கீதம் மற்றும் ஹிந்தி பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக திணைக்களம் கூறியுள்ளது. மேலும் 08 பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள்இன்று (08) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். குறித்த விடைத்தாள்கள், வௌி மாகாணங்களில் அமைந்துள்ள 10 மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை விரைவில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்…

Read More

இலங்கையின் வறுமை வீதம் இரட்டிப்பாக அதிகரிப்பு – உலக வங்கி

இலங்கையின் வறுமை வீதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் ஈராண்டுகளுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம் 2021ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வறுமை வீதம் தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றது. நாட்டின் வறுமை நிலை 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 13.1 வீதத்திலிருந்து 25 வீதம் வரை அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சனத்தொகையில் மேலும் 2.5 மில்லியன் பேர் வறுமை…

Read More