கனடா -ஆல்பர்ட்ரா மாகாணத்தில் காட்டுத்தீ: அவரச நிலை பிரகடனம்
கனடாவின் ஆல்பர்ட்ரா மாகாணத்தில் காட்டுத் தீ பற்றி எரிவதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆல்பர்ட்ரா மாகாணத்தில் உள்ள டிரையிங் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2 நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. காற்றின் வேகம் காரணமாக அடுத்தடுத்து 110 இடங்களில் நெருப்பு பற்றி எரியும் நிலையில், 36 இடங்களில் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக மாறியுள்ளது. ஹெலிகாப்டரில் தண்ணீர் கொண்டு சென்று தீயை அணைக்கும் முயற்சியில்…

