5 ரயில் சேவைகள் இரத்து

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று(10) காலை 5 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புத்தளம் மார்க்கத்தில் ஒரு ரயில் சேவையும் களனிவௌி மார்க்கத்தின் 02 ரயில் சேவைகளும் குருணாகல் மற்றும் மொறட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் 2 ரயில் சேவைகளும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் M.J.இதிபொலகே தெரிவித்தார். அத்துடன், கொழும்பு – பதுளை இடையிலான உடரட்ட மெனிக்கே ரயில் சேவையையும் இன்று(10) இரத்து…

Read More

நுவரெலியாவில் கேபிள் கார் திட்டம்

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நுவரெலியாவில் கேபிள் கார்(Cable Car) திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபையின் தலைவர் சம்பத் பிரசன்ன பெர்னாண்டோ தெரிவித்தார். இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனை முன்னிட்டு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், உலகின்…

Read More

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று(09) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிரதி பொது முகாமையாளர் பதவிக்கு அதிகாரியொருவரை நியமிப்பது தொடர்பான பிரச்சினையை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். இந்த விடயம் குறித்து ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் M.J.இதிபொலகேவிடம் வினவிய போது, நேர அட்டவணையின் பிரகாரம் இன்று(10) ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என கூறினார்.

Read More

அமெரிக்காவில் அரங்கேறிய தமிழர்களின் பாரம்பரிய பறையிசை

 தமிழர்களின் பாரம்பரிய இசையான பறையிசைஅமெரிக்க மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே 1 முதல் 14ஆம் தேதி வரை அங்கு பாரம்பரிய மாதம் கொண்டாடப்படும். அமெரிக்காவில் வசிக்கும் ஒவ்வொரு நாட்டினரும் தங்கள் நாட்டின் கலை திறன்களை போற்றும் வகையில் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்துவர். இந்த ஆண்டு முதல் முறையாக தமிழர்களின் வீரம் செறிந்த பாரம்பரியத்தை விளக்கும் பறையிசை, துடுப்பு இசை, சிலம்பம், சுருள் வாள் ஆகியவை பாரம்பரிய கலைநிகழ்ச்சியில் இடம்பிடித்தன. பொதுவாக ஜப்பான்,…

Read More

தங்க சுரங்கத்தில் தீ விபத்து 27 தொழிலாளர் பரிதாப பலி

தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் லாஎஸ்பெ ரான்சா மாகாணம் அரேக்யூபா நகரில் தங்க சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென சுரங்கம் முழுவதும் பரவியது. கடும் புகை மூட்டமும் ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர். இந்த…

Read More

பாதுகாப்பு கருதி ‘தி கேரளா ஸ்டோரி’ நிறுத்தம்

அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தி கேரளா ஸ்டோரி’. இதன் டீசர் வெளியானதில் இருந்தே படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்ட இந்தப் படத்துக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்திலும் எதிர்ப்பு ஏற்பட்டது. படத்துக்கு தடை விதிக்க கோரிய மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை படம் வெளியானது….

Read More

மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா – கவனம் ஈர்த்த சோனம் கபூரின் பேச்சு

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் நடிகை சோனம் கபூர் பேசியது அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. நடிகர் தனுஷ் உடன் ‘ராஞ்சனா’ படத்தில் நடித்தவர் சோனம் கபூர். பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார். பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டிக்கொண்டதை ஒட்டி, விண்ட்சர் கோட்டையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இதில் நடிகர் டாம் குரூஸ் உட்பட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர். விழாவில் ‘நமஸ்தே’ என…

Read More

பிரதான சந்தேக நபர் கைது

மர்மமான முறையில் உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பான பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். களுத்துறை, இசுரு உயன பகுதியைச் சேர்ந்த தனுஷ்க கயான் என்ற 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் காலி பிரதேசத்தில் பதுங்கியுள்ளதாக, களுத்துறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைக்குமாறு…

Read More

ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்காக உலக வங்கியுடன் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

Read More

மண்டைதீவில் 85 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில்,  85 கிலோகிராம் கேரள கஞ்சா திங்கட்கிழமை (08) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Read More