மக்களே அவதானம் ! சூரிய ஒளியால் கண்களுக்கு பாதிப்பு
சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரினதும் கண்களில் நேரடியாக சூரிய ஒளி படாத வண்ணம் செயற்படுமாறும், தரமான கண்ணாடிகள் மற்றும் தொப்பிகளை அணியுமாறும் தேசிய கண் வைத்தியசாலையின் சிநேஷ்ட வைத்தியர் பிரசாத் கொலம்பகே அறிவுறுத்தியுள்ளார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நேரடியாக சூரிய ஒளி அதிகமாகப்படும் பட்சத்தில் கண்கள் பாதிக்கப்படும் என்றும் கண் நோய்கள் மற்றும் பிற பிரச்சினைகளின் ஆபத்தை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கண்ணாடிகள் அணிவதன்…

