இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, மே மாதத்தில் பணவீக்கம் 25.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த சுட்டெண்ணின் படி, ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 35.3 சதவீதமாக பதிவாகி இருந்தது. ஏப்ரல் மாதத்தில் 30.6 சதவீதமாக இருந்த உணவு வகை பணவீக்கம், ஏப்ரலில் 21.5 சதவீதமாக குறைந்துள்ளது.

Read More

தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (31) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் “22 கேரட்” தங்கத்தின் விலை 149,000 ரூபாவாக குறைந்துள்ளது. கடந்த வாரம் புதன்கிழமை இது 154,500 ரூபாவாக பதிவாகி இருந்தது. இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை 167,000 ரூபாவாக இருந்த ஒரு பவுன் “24 கேரட்” தங்கத்தின் விலை தப்போது 161,000 ஆக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை வட்டாரங்கள்…

Read More

இலங்கை குறித்து IMF இன் அறிவிப்பு

இலங்கையின் தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களில் முன்னேற்றத்தை பாராட்டுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா தெரிவித்துள்ளார். இன்று காலை நிதி இராஜாங்க அமைச்சிர் ஹெஷான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்ததாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை

எமது நாட்டு விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த அரச நிறுவன அதிகாரிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு (Bill and Melinda Gates foundation) உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். விவசாயத் துறையின் நவீனமயமாக்கல், போசாக்கு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் நிதிப் பாதுகாப்பு ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்கையில் தரவு அடிப்படையிலான முடிவுகளை எடுப்பதற்கான அணுகுமுறை…

Read More

“ஆண் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்குவது நான் மட்டுமே”: கங்கனா பெருமித பகிர்வு

திரைத்துறையில் தான் மட்டுமே ஆண் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்குவதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை பிரியங்கா சோப்ரா ‘ஆண் நடிகர்கள் வாங்கும் சம்பளத்தில் வெறும் 10 சதவீதம் தான் நடிகைகளுக்கு வழங்கப்படுவதாக’ கூறியிருந்தார். மேலும் அப்பேட்டியில் பேசிய அவர், “இதுவரை நான் 60 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். ஆனால் ஒரு படத்தில் கூட ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கவில்லை. இப்போதும் பல நடிகைகள் இதை அனுபவித்துக்…

Read More

இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா? – ஐசிசிக்கு நெருக்கடி

உலகக் கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி, பாகிஸ்தான் வர மறுத்தால், பாகிஸ்தான் அணியும் உலகக் கோப்பை தொடருக்கு இந்தியா செல்லாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜீம் சேத்தி தெளிவாகக் கூறியதை அடுத்து பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐசிசி தலைவர் கிரெக் பார்க்ளே, சிஇஓ ஜெஃப் அலார்டிஸ் ஆகியோர் லாகூருக்கு வந்துள்ளதாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சுமுக முடிவு…

Read More

நியூயார்க் நகர மக்களை வசீகரித்த சூரிய அஸ்தமனம்

சூரிய உதயமும், அஸ்தமனங்கலும் ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்கையில் ஒரு கணம் அமைதிப்படுத்தக் கூடியவை. அந்த மன அமைதியைதான் நியூயார்க்கின் பகுதிவாசிகள் நேற்று கடத்திருக்கிறார்கள். நியூயார்க்கின் பரப்பரப்பான விதிகளில் ஒன்று மன்ஹாட்டன். வானளவு உயர்ந்த கட்டிடங்களால் உலக அளவில் பெயர் பெற்றது மன்ஹாட்டன். இதில் மன்ஹாட்டனின் முக்கிய வீதிகளில் நேற்று மாலை ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இயற்கையின் கண்கொள்ளா காட்சியை தங்களது கைபேசிகளில் பதிவு செய்திருக்கிறார்கள். காரணம்… மன்ஹாட்டனின் பிரமாண்ட உயர்ந்த கட்டிடங்களுக்கு மத்தியில் பிரமாண்ட சூரியன் மெல்ல…

Read More

“மக்களை அச்சுறுத்துகிறது பாஜக” – அமெரிக்காவில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் மக்களை அச்சுறுத்தக்கூடியதாக பாஜக அரசு உள்ளது என்று அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரின், சான்டா க்ளாராவில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது, “பாஜக அரசு அனைத்து மக்களையும் அச்சுறுத்துகிறது. அரசு நிறுவனங்களைத் தவறான வழியில் பயன்படுத்துகிறது. மக்களைத் தொடர்பு கொள்ளக்கூடிய அரசின் அனைத்து அமைப்புகளையும் பாஜகவும் ஆர்எஸ்எஸும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன….

Read More

யாழ்நூலக எரிப்பின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்ட 42 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியாவில் அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள பந்தலில் குறித்த நிகழ்வு புதன்கிழமை (31) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள் யாழ் பொதுநூல் நிலைய எரிப்பானது தமிழ் இன அழிப்பின் ஒரு வடிவம் என குறிப்பிட்டனர்.

Read More

வவுனியா – புளியங்குளத்தில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

புளியங்குளம் – மதியாமடு பகுதியில் 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை (31) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புளியங்குளம் – மதியாமடு பகுதியில் வசித்து வந்த கெ.சதீஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். செவ்வாய்க்கிழமை (30) இரவு தனது தோட்டத்திற்கு சென்ற குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து  தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார்.  தூக்கில் தொங்குவதை அவதானித்த பொதுமகனொருவர் புளியங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டதுடன், இது தொடர்பான…

Read More