வெடுக்குநாறிமலை வழிபாடுகளை தடுக்கக்கூடாது – வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவு
வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக பக்தர்கள் செல்வதை தடுக்கும் வகையில் எந்தவொரு அரச அதிகாரியும் செயற்படக்கூடாது என வவுனியா நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. வவுனியா வடக்கு, ஒலுமடுவிலுள்ள தொல்பொருள் சிறப்புமிக்க வெடுக்குநாறிமலை, ஆதிசிவன் ஆலயத்திலுள்ள விக்கிரகங்கள் அண்மையில் சேதமாக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது வெடுக்குநாறிமலை பகுதியில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக பக்தர்கள் செல்வதை தடுக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில்…

