பெண் ஊடகவியலாளர் மீது நிறுவன அதிகாரி பாலியல் தொந்தரவு : விசாரணைக்கு குழு நியமிப்பு ! 

சுயாதீன தொலைக்காட்சி ஊடகவியலாளரான பெண் ஒருவரை அதே தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிகாரியொருவர் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் தொடர்பில் அண்மையில் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை மையமாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சட்டத்தரணியின் தலைமையில் சுயாதீன குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சர் பந்துல குணவர்தன செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்துள்ளார். சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவரான சட்டத்தரணி சுதர்சன குணவர்தன இந்த விவகாரம் தொடர்பில் தமக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.  ஊடக அமைச்சின் செயலாளரிடம் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளரை முறைப்பாடு…

Read More

எக்ஸ்பிரஸ்பேர்ள் கப்பல் விவகாரம் – சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு

எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தத்தின்  கப்பல் மூலம் இலங்கை கடலில் ஏறபட்ட பாதிப்புகளிற்கு இழப்பீட்டை கோரும் வழக்கை இலங்கை அரசாங்கம் சிங்கப்பூர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சட்டமாஅதிபர் சஞ்சய் ராஜரட்ணம் இதனை உறுதி செய்துள்ளார்.சிங்கப்பூரில் உள்ள சட்டநிறுவனமொன்றின் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இழப்பீட்டு தொகை குறித்து நீதிமன்றத்திற்கு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Read More

நிபந்தனைகளை செயற்படுத்த ஒரு சில சட்டங்கள் இயற்றப்படும் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்த ஒரு சில சட்டங்கள் இயற்றப்படும். அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை திறைசேரி மேற்கொண்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு பதிலளித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றினார். இதன்போது எழுந்து கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க  இராச்சியங்களுக்கு இடையில் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தங்களை சட்டமாக்குவது தொடர்பில்  சர்வதேச…

Read More

இந்திய சுற்றுலா பயணிகளால் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் – மத்திய வங்கி ஆளுநர்

இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளால் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்திய வணிக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார். ‘இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் எதிர்காலப் பயணம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த செயலமர்வு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தலைமையில் நடைபெற்றது. …

Read More

சூடானில் நிர்க்கதிக்குள்ளான 13 இலங்கையர்கள் மீட்பு

சவுதி அரேபிய அரசாங்கத்தின் ஆதரவுடன் சூடானில் தங்கியிருந்த 13 இலங்கையர்கள் அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது இலங்கையர்கள் சவுதி அரேபியாவின் JEDDAH நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் 12 இலங்கையர்களை சூடானிலிருந்து வௌியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சூடானில் தொடர்ந்தும் தங்கியுள்ள இலங்கை பிரஜைகளை இந்தியா மற்றும் சவுதி அரேபியாவின் ஆதரவுடன் வௌியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எகிப்தின் நைரோவில் உள்ள தூதரகம், காடோன் நகரில் உள்ள கன்சியுலர் அலுவலகம், சூடான் அதிகாரிகள் மற்றும்…

Read More

வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பில் வெளியான புதிய சுற்று நிரூபம்

தொழிலுக்காக வௌிநாடு செல்லும் பெண்களினதும் அவர்களின் பிள்ளைகளினதும் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு புதிய சுற்றுநிருபமொன்று வௌியிடப்பட்டுள்ளது.  தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இந்த சுற்றுநிருபத்தை வௌியிட்டுள்ளது.  இதற்கமைய, இரண்டு வயதிற்கு குறைவான பிள்ளைகளை உடைய தாய்மாருக்கு வேலைவாய்ப்பிற்காக வௌிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது.  அத்துடன், தொழிலுக்காக வௌிநாடு செல்லும் 45 வயதிற்குட்பட்ட அனைத்து பெண்களும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  புதிய சுற்றுநிருபத்திற்கமைய, 18 வயதிற்கு குறைவான திருமணமாகாத பிள்ளைகளை…

Read More

நெடுந்தீவில் ஐவர் கொலை: சந்தேகநபருக்கு மே 9 ஆம் திகதி வரை விளக்கமறியல்

யாழ். நெடுந்தீவில் ஐந்து பேரை கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் 48 மணித்தியாலங்கள் தடுப்பு வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.  நேற்று (25) காலை ஊர்காவற்றுறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டார். யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேகநபரை மன்றில் ஆஜர்படுத்தினர். விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி…

Read More

4 மாதங்களுக்குள் 9 நில அதிர்வுகள் – புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 09 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. 04 மாதங்களுக்குள் 09 தடவைகள் நில அதிர்வுகள் பதிவாகிய முதலாவது சந்தர்ப்பம் இதுவென பணியகம் குறிப்பிட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலன நில அதிர்வுகள் நாட்டின் உட்பகுதியில் பதிவாகியுள்ளதுடன், சில நில அதிர்வுகள் நாட்டை அண்மித்த கடற்பிராந்தியத்தில் பதிவாகியுள்ளன. அதிகூடிய மெக்னிடியூட் அளவான நில அதிர்வு புத்தல – சூரியவெவ பகுதியில் பதிவாகியிருந்தது. நாட்டில் பதிவாகிய நில அதிர்வுகள் தொடர்பான தரவுகள்…

Read More

கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட போதைப்பொருள்

கனடாவில் வசிக்கும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மற்றுமொரு நபருக்கு அனுப்பிய பொருட்கள் அடங்கிய 2 மரப்பெட்டிகளை சோதனையிட்ட போது அவற்றில் 12 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். குறித்த மரப்பட்டிகளில் இருந்து 24 போதைப்பொருள் பார்சல்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 84 மில்லியன் ரூபாவாகும்.

Read More

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை

பிறப்புச் சான்றிதழ் இல்லாத இலங்கைப் பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய முறையை ஆட்பதிவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அதிகாரிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Read More