பிரதமர் மோடி இருந்தால் எதுவும் சாத்தியம்: பாகிஸ்தானியர்கள் புகழாரம்
பிரதமர் நரேந்திர மோடி இருந்தால் எதுவும் சாத்தியம் என்று ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். ஆஸ்திரேலிய தலைநகர் மெல்பர்னில் அமைந்துள்ள புன்ஜில் அரண்மனையில் உலக நல்லெண்ணம் தொடர்பான நிகழ்ச்சிக்கு டெல்லி என்ஐடி அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்தனர். பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த டாக்டர் தாரிக் பட் (அகமதியா முஸ்லிம் கம்யூனிட்டி) கூறியதாவது. அனைத்து சமூகங்களையும் மதிக்கும் திறன்…

