‘ஃபர்ஹானா’ படத்தை திரையிட தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் எதிர்ப்பு
‘ஃபர்ஹானா’ திரைப்படத்தை திரையிட தமிழக காவல் துறை அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட தவ்ஹித் ஜமாத் தலைவர் இப்ராஹிம் சபீர் வெளியிட்டுள்ள அறிக்கை: அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் மத ரீதியான பிரச்சினைகளை உருவாக்கத் திரைப்படங்களை எடுத்து அவற்றை திரையிட்டு வருவது அதிகரித்து வருகிறது. இதைத் தமிழகக் காவல்துறை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். சமீபத்தில் ஓடிடி மூலம் வெளியிடப்பட்ட ‘புர்கா’ என்ற திரைப்படம்…

