உணவு ஒவ்வாமையால் 26 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலை மாணவர்கள் 26 பேர் உணவு ஒவ்வாமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலையில் இன்று காலை வழங்கப்பட்ட உணவினை உட்கொண்ட மாணவர்கள் 26 பேருக்கு இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்ட நிலையில், அவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் சுமார் 150 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சுகாதார பரிசோதகர்கள் ஆய்வுகளை முன்னெடுத்துள்ள நிலையில், மாணவர்களுக்கு பாரிய பாதிப்புகள் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

40 இலங்கையர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை

சூடானில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் மேலும் 40 க்கும் ​மேற்பட்ட இலங்கையர்கள் அங்கிருப்பதாக சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவிக்கின்றது.  நிர்க்கத்தியாகியுள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக மீட்டு நாட்டுக்கு அழைத்துவரும் நோக்கில் சவூதி அரேபிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் பி எம் ஹம்சா குறிப்பிட்டுள்ளார்.  சூடானில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 13 இலங்கையர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு ஜித்தா நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் அவர்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர்…

Read More

நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கைது

முல்லைத்தீவு – நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்பரப்பில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்தது. சந்தேகநபர்களிடமிருந்து 8 டிங்கி படகுகளும் சுழியோடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. நீர்கொழும்பு, முல்லைத்தீவு, கிண்ணியா, சீன துறைமுகத்தை சேர்ந்த 29 தொடக்கம் 56 வயதிற்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைப்பற்றப்பட்ட டிங்கி படகுகள், உபகரணங்களுடன் சந்தேகநபர்கள் முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Read More

வசந்தகரணாகொடவிற்கு எதிரான அமெரிக்க தடை – ரஸ்யா அதிருப்தி

இலங்கை உட்பட இறைமையுள்ள எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடுவதை  ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர்Levan Dzhagaryan  தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகள் தங்கள் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் மேற்குலகில் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசுகின்றோம்,அவர்களிற்கு பல பிரச்சினைகள் உள்ளன,அவ்வாறான நிலை காணப்படுகின்ற போதிலும்  இலங்கை போன்ற நாடுகளிள் உள்விவகாரங்களில் தலையிடுவதை  ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். நீங்கள் எதனை செய்யவேண்டும் எதனை செய்யக்கூடாது என உங்களிற்கு…

Read More

திருடர்களுடன் எந்த வித டீல்களை போட மாட்டோம்- சஜித்

வரிக்கு மேல் வரி விதித்து மக்களை ஒடுக்கும் ஊழல் நிறைந்த அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியினதோஅல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியினைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினரும் கைகோர்க்க மாட்டார்கள் எனவும், இந்நாட்டை கொள்ளையடித்து, ஏமாற்றி, ஏலம் விட்டு, குடும்ப ஆட்சி நடத்தும் நபர்களுடன் எந்நிலையிலும் ஒன்றிணைந்து ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். டொலர் திருட்டில் ஈடுபட்டவர்கள், இந்த நாட்டிலிருந்து அரச வளங்களையும், டொலர்களையும் திருடி அழித்தவர்கள், பண்டோரா பத்திரங்கள் மூலம் வெளிப்பட்ட மோசடிக்காரர்கள்…

Read More

நெடுந்தீவு ஐவர் படுகொலை – ஆறாவது நபரும் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் நகைகளை அபகரிக்கும் நோக்குடன் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். 100 வயது மூதாட்டியான பூரணம் இன்று (27) வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். அவரது இருதயம் செயலிழந்ததனால் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்தனர். 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்…

Read More

பொலிஸாருக்கு ஒரு மாத காலக்கேடு

நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வினைத்திறனான சேவையை முன்னெடுப்பதற்காகப் பொலிஸ் திணைக்களத்தில் கொண்டுவர உத்தேசித்துள்ள வேலைத்திட்டத்தை ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்தார். 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றை ஆராய்வதற்காக பொலிஸ் திணைக்களம், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டிருந்தபோதே அக்குழுவின் தலைவர்…

Read More

“மல்யுத்த வீராங்கனைகளின் நியாயமான எதிர்ப்பை இழிவுபடுத்துவது அழகில்லை” – பி.டி.உஷாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி நடத்தி வரும் போராட்டம் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த…

Read More

‘பொன்னியின் செல்வன் 2′ அதிகாலை சிறப்பு காட்சி இல்லை

இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் 2 ம் பாகம் இன்று வெளியாகிறது. முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவது உண்டு. ஆனால், ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. நள்ளிரவு மற்றும் அதிகாலையில் அனுமதியின்றி காட்சிகள் திரையிடப்படுகிறதா என்பதை கண்காணிக்க தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ரெட்ஜெயன்ட் நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்துக்கே சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்காதது திரையுலகில் பரபரப்பை…

Read More

“காதலுக்கு மரியாதை…”- கஸ்தூரியின் பதிவுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ‘நச்’ பதில்

நடிகை கஸ்தூரியின் கேள்விக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்துள்ள பதில் ட்விட்டரில் வைரலாகிவருகிறது. அண்மையில் சென்னையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் இருந்தபோது நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், அவரது மனைவி சாயிராவையும் மேடைக்கு வருமாறு அழைத்தனர். அவர் மேடைக்கு வந்து ரஹ்மான் அருகில் நின்றதும் அவரிடம் ’ஏ.ஆர்.ரஹ்மான், ‘இந்தியில் வேண்டாம், தமிழில் பேசவும்’ என்று கூறுகிறார். உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் ஆர்ப்பரிக்க, சாயிரா புன்னகையுடன் ‘கடவுளே’ என்று…

Read More