2 பாகங்களாக உருவாகிறது சூர்யாவின் ‘கங்குவா’

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம், ‘கங்குவா’. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் இந்தி நடிகை திஷா பதானி, யோகி பாபு, ஆனந்த் ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். தேவி பிரசாத் இசையமைக்கிறார். 3-டியில் உருவாகும் இந்தப் படம், 10 மொழிகளில் வெளியாகிறது. இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்தப் படம் 2 பாகங்களாக வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல் பாகத்தின் கிளைமாக்சில்…

Read More

இளவரசர் ஹரியின் மனைவி பார்க்க விரும்பாத படங்களை வெளியிடவுள்ள அவுஸ்திரேலிய தொலைக்காட்சி

இளவரசர் ஹரியின் மனைவி மேகன் Meghan Markle  மீண்டுமொருமுறை பார்க்கவிரும்பாத புகைப்படங்களை வெளியிடவுள்ளதாக அவுஸ்திரேலிய தொலைக்காட்சியொன்று அறிவித்துள்ளது. நான் மீண்டுமொருமுறை பார்க்கவிரும்பாத படங்கள் என மேகன் குறிப்பிட்டிருந்த படங்களை வெளியிடுவதன் மூலம் அவுஸ்திரேலிய தொலைக்காட்சியொன்று மேகனிற்கு சீற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. அவுஸ்திரேலியாவின் 7 நியுஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு ஹரியின் மனைவியின் குடும்பத்தவர்களின் பேட்டிகள் அடங்கிய விசேட நிகழ்சியை ஒலிபரப்பாகவுள்ளது- மேகனிற்கும் அவரது குடும்பத்தவர்களிற்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகின்றது. மேகனின் குடும்பத்தவர்கள் லொஸ்ஏஞ்சல்சில் அவர் வளர்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்…

Read More

அமெரிக்காவில் இராணுவ பயிற்சியின்போது ஹெலிகொப்டர்கள் நேருக்கு நேர் மோதி மூவர் பலி

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஹீலி என்ற இடத்தில் இராணுவத்தினர் நேற்று முன்தினம் வழக்கமான இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென 2 ஹெலிகொப்டர்கள் நேருக்கு நேர் மோதி கீழே விழுந்து நொறுங்கியுள்ளன. இந்த கோர விபத்தில் ஹெலிகொப்டரில் இருந்த 2 இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மற்றொரு வீரர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் ஒரு இராணுவ வீரர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Read More

ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 33 இராணுவ வீரர்கள் பலி

ஓவ்கடோக், மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவை இராணுவ வீரர்களை குறிவைத்தும், அப்பாவி பொதுமக்களை தாக்கியும் அங்கு கடுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க இராணுவத்தினர் முகாமிட்டு தாக்குதலை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாட்டின் தலைநகரான ஓவ்கடோக்கில் நேற்று முன்தினம் வியாழக்கிழமைஅ இராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்தனர். இந்த இராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த…

Read More

இந்தோனேசியாவில் கடலில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ரியாவில் உள்ள இந்திரகிரி ஹிலிர் என்ற துறைமுக பகுதியில் இருந்து ரியாவ் தீவின் தலைநகரான தஞ்சோங் பினாங்குக்கு பயணிகள் படகு ஒன்று புறப்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்டவர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்த படகு புளாவ் புருங் என்ற இடத்துக்கு அருகே உள்ள கடற்பகுதியில் சென்றபோது திடீரென கடலில் கவிழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து கடலோர பொலிசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கமைய அவர்கள் மீட்பு படையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து, கடலில் தத்தளித்து…

Read More

ஐ.எம்.எப். கடனுதவி ; 95 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளினால் நேற்று வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனுதவி தொடர்பான யோசனை 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்கெடுப்பின் போது சபையில் 79 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதுடன், அது தொடர்பில் குறித்த கட்சி ஆறு விடயங்களை…

Read More

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டது

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு அமைய, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை பிற்போட தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பெருமளவில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதி அமைச்சர், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு சட்டமூலத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என கூறினார். நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்பவே அரசாங்கம் பாராளுமன்றத்தில் சட்டங்களை உருவாக்குவதாகவும் பலரதும் கருத்துகளைப் பெற்று, தேவையான திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னரே அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும்…

Read More

13 ஆவது திருத்தத்தை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும்: கோபால் பாக்லே உறுதி

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் எனும் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கியுள்ளார்.  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று வெள்ளிக்கிழமை (28)  காலை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். இதனிடையே, இலங்கை தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பாகவும் அந்த விடயம் சார்ந்த செயற்பாடுகளின் நிலைமை குறித்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைத்துள்ளதாக…

Read More

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில்உடைக்கப்பட்டவை உட்பட 5 சிலைகள் பிரதிஷ்டை

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறிமலை  ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் உடைக்கப்பட்ட சிலைகள் உள்ளிட்ட 5 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.  வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறிமலை  ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் உடைக்கப்பட்ட சிலைகள் உள்ளிட்ட 5 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. நேற்று(27) வவுனியா நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து, இன்று(28) சிலைகள் வைக்கப்பட்டன. சிவலிங்கம் , முருகன், பிள்ளையார், அம்மன், வைரவர் சிலைகள் இன்று பிரதிட்டை செய்யப்பட்டன. சிலைகள் வைக்க ஆயத்தங்கள் செய்யப்பட்ட போது, நெடுங்கேணி பொலிசார்  தடை செய்ய முற்பட்டனர். ஏற்கனவே உடைக்கப்பட்ட சிலைகளையே…

Read More

தாய்லாந்தில் 13 கொலைகளை செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண் கைது

தாய்லாந்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது காதலர் மற்றும் தோழிகள் உள்பட 13 பேரை விஷம் கலந்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சராரத் ரங்சிவுதாபாா்ன் (32) என்ற பெண்ணை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் உயிரிழந்த தோழி உள்பட மொத்தம் 13 பேரை சயனைடு விஷம் கொடுத்து கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கொலை செய்யப்பட 13 பேரில் அவரது காதலனும் ஒருவர் எனக் கூறப்படுகின்றது. 2020 ஆம்…

Read More